தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணியும், 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் தொடரை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கியுள்ளது. இப்போட்டிக்கான 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஹனுமா விஹாரிக்கு பதிலாக விராட் கோலியும் சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள். தென் ஆப்பிரிக்கா அணியில் மாற்றம் எதுவுமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com