Published : 10,Jan 2022 04:49 PM

சிக்ஸர் இல்லை; ஆனாலும் ஒரே பந்தில் 7 ரன்கள் ; வங்கதேசம்-நியூசி. டெஸ்ட் போட்டி சுவாரஸ்யம்

Bangladesh-Team-made-a-comedy-Error-and-New-Zealand-scored-7-runs-from-single-delivery-and-here-is-how--

வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி தற்போது Hagley ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி செய்த தவறினால் நியூசிலாந்து அணி ஒரே பந்தில் 7 ரன்கள் எடுத்துள்ளது. அதுவும் சிக்ஸர் கூட விளாசாமல் இந்த ரன்களை அந்த அணி எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் விளையாடிய போது இந்த தவறை வங்கதேச அணி செய்துள்ளது. அந்த ஓவரை Ebadot ஹுசைன் வீசி இருந்தார். இவர் கடந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றவர். 

அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட வில் யங்கின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது. ஆனால் ஸ்லிப் ஃபீல்டர்கள் அந்த கேட்ச் வாய்ப்பை தவறிவிட்டனர். பந்து பவுண்டரி லைனை நோக்கி நகர வங்கதேச ஃபீல்டர் ஒருவர் அதனை தடுத்தார். கீப்பர் எண்டுக்கு அவர் பந்தை த்ரோ செய்ய அதை பிடித்த பேக்-அப் ஃபீல்டர் மறுமுனையில் இருந்த ஸ்டம்பை தகர்க்க முயன்றார். ஆனால் அது ஸ்ட்ம்பை மிஸ் செய்ததோடு, பவுண்டரி லைனையும் கடந்திருந்தது. அதற்கு நியூசிலாந்து வீரர்கள் யங் மற்றும் லேதம் மூன்று ஓட்டங்களை எடுத்திருந்தனர். அந்த ஒவர்த்ரோவையும் சேர்த்து நடுவர் 7 ரன்கள் என சிக்னல் கொடுத்திருந்தார். 

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 521 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. டாம் லாதம் இரட்டை சதமும், கன்வே சதமும் அடித்து இருந்தனர். வங்கதேச தனது முதல் இன்னிங்ஸில் அணி 126 ரன்களில் ஆல் அவுட்டானது. தற்போது 395 ரன்கள் வங்கதேச அணி இந்த ஆட்டத்தில் பின் தங்கியுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்