அக்தரை ட்விட்டரில் வறுத்தெடுத்த இந்திய ரசிகர்கள்..!

அக்தரை ட்விட்டரில் வறுத்தெடுத்த இந்திய ரசிகர்கள்..!

அக்தரை ட்விட்டரில் வறுத்தெடுத்த இந்திய ரசிகர்கள்..!
Published on

புனே மைதான விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்த கருத்துக்கு ட்விட்டரில் இந்திய ரசிகர்கள் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேசன் மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டி தொடங்க சில மணி நேரத்திற்கு முன்பு மைதான பராமரிப்பாளர் பாண்டுரங் சல்கோன்கர் திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். சல்கோன்கர், பெயர் குறிப்பிடப்படாத இரண்டு பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக பிட்சை தயார் செய்யப்போவதாகக் கூறிய வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புனே மைதான சர்ச்சை தொடர்பாக சோயப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில், “புனே மைதான பிக்ஸிக் ஊழல் செய்தி கேள்விபட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை” என்று கூறியிருந்தார். மேலும், அவர் மற்றொரு ட்விட் பதிவில், “பிட்ச் பிக்ஸிங் என்ற செய்தி வதந்தியாகவோ அல்லது ஜோக்காகவோ இருந்தாலும் இதனை இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் ஏற்கனவே கிரிக்கெட் போட்டி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அக்தரின் இந்த கருத்தால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள், அவருக்கு எதிர்விமர்சனம் செய்து ட்விட் செய்து வருகிறார்கள். பலரும் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கியதை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தனர். குற்றம் நடைபெற்றதாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும் உங்கள் நாட்டு பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com