KKR vs RR : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்

KKR vs RR : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்

KKR vs RR : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்
Published on

நடப்பு ஐபிஎல் சீசனின் 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

ஐபிஎல் அரங்கில் இரு அணிகளும் 24 முறை மோதி உள்ளன. அதில் கொல்கத்தா 12 முறையும், ராஜஸ்தான் 11 முறையும் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக இந்த இரு அணிகளும் விளையாடியதில் ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 

ஆடும் லெவன் விவரம்... 

ராஜஸ்தான் ராயல்ஸ்!

யஷாஸ்வி ஜெய்ஸ்வால், லியாம் லிவிங்ஸ்டன், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), பிலிப்ஸ், அனுஜ் ராவத், சிவம் தூபே, கிறிஸ் மோரிஸ், ராகுல் தேவாடியா, ஜெய்தேவ் உனட்கட், சேத்தன் சகரியா, முஸ்தாபிஜூர் ரஹ்மான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com