கனவுக்கு தடை போட்ட புற்றுநோய் ! மீள்வாரா ரோமன் ?

கனவுக்கு தடை போட்ட புற்றுநோய் ! மீள்வாரா ரோமன் ?
கனவுக்கு தடை போட்ட புற்றுநோய் ! மீள்வாரா ரோமன் ?

wwe என்று உலகளவில் கொண்டாடப்படும் மல்யுத்தப் போட்டி உலகளவில் மிகவும் பிரபலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்தப் போட்டிகள் அமெரிக்காவில் மிகவும் பிரபலம், இந்தப் போட்டிகள் வாரந்தோறும் இரண்டு பெயர்களில் நடத்தப்படுகிறது. இது wwe ரா என்றும் ஸ்மேக் டவுன் என்றும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும். இது இந்தியாவில் நேரலையாக செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஒளிபரப்பப்படும். இவ்வகையான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. முக்கியமாக wwe போட்டிகளுக்கு சிறுவர்கள் பலரும், பெரியவர்கள் சிலரும் இன்னும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவில் 1990-களுக்கு பின்பு கேபிள் டிவிகளும், சேட்டிலைட் சேனல்களும் வந்த பின்புதான் wwe பிரபலமாக தொடங்கியது. wwe போட்டிகளில் ஹல்க் ஹோகன், ரிக் ஃப்ளேர், ஹிட் மேன், மாச்சோ மேன், அண்டர்டேக்கர், ஸ்டோன் கோல்டு, ராக், படீஸ்டா, ட்ரிப்பிள் எச் மற்றும் ஜான் சீனா ஆகியோர் wwe போட்டிகளை பார்ப்பவர்களின் ஆதர்ச நாயகன்களாக இருக்கின்றனர். இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு ரோமன் ரெய்ன்ஸ்.

இப்போது wwe சாம்பியனான ரோமன் ரெய்ன்ஸ் இந்திய நேரப்படி ஒளிபரப்பான wwe ராவில், ஒரு அதிர்ச்சிகரமான தகவலை ரசிகர்களோடு தெரிவித்தார். அது, "தனக்கு லுகுமேனியா என்ற வகையான புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நோய் எனக்கு இருந்தது. அதிலிருந்து நான் மீண்டு வந்து போட்டிகளில் பங்கேற்றன். இப்போது இந்த புற்றுநோய் மீண்டும் என தாக்கியுள்ளது." என கூறினார்.

இந்தத் தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்களுக்கு மேலும் சில தகவல்களை பகிர்ந்தார் ரோமன் ரெய்ன்ஸ் அதில் "லுகுமேனியாவுக்கு சிகிச்சை பெறவுள்ளதால், தன்னால் இப்போது போட்டிகளில் பங்கேற்க முடியாது. அதனால் wweவில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். இதோ இந்த சாம்பியன் பெல்ட்டை இப்படியே விட்டுவிட்டு செல்கிறேன். இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இறைவனின் துணை இருந்தால் மீண்டும் இந்த ரிங்கில் சந்திக்கிறேன்" என கண்ணீர் மல்க தெரிவித்துவிட்டு ரிங்கில் இருந்து ரசிகர்களுக்கு கையசைத்தப்படி வெளியேறினார் ரோமன் ரெய்ன்ஸ்.

இந்தக் காட்சியை கண்ட பல ரசிகர்கள் அழுதனர். மேலும், wweவை சேர்ந்த மற்ற வீரர்களும் ரோமன் ரெய்ன்ஸ்க்கு பிரியா விடை கொடுத்தனர். இதனையடுத்து ட்விட்டர் வலைத்தளத்தில் #RomanReigns என்ற ஹாஷ் டாக் டிரண்ட் ஆகி வருகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர் ரோமன் ரெய்ன்ஸ். இவரின் இயற்பெயர் ஜோசப் அனோவா. ஆரம்பத்தில் கால்பந்து வீரராக இருந்த ரோமன், பின்னாளில் மல்யுத்தம் மீதான ஆர்வத்தில் wwe போட்டிகளில் பங்கேற்றார். 2014 இல் கலீனா பெக்கர் என்பவரை திருமணம் செய்த ரோமனுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது.

மல்யுத்த ரிங்கில் ரோமன் ரெயன்ஸின் துடிப்பான நகர்வும், அவரின் பிரத்யேக தாக்குதல் முறையான "ரோமன் ஸ்பியர்" பெரும்பாலான இளைஞர்களை கவர்ந்தது. wwe போட்டிகள் ஒரு நாடகம் போலதான் என்றாலும் இப்போதுள்ள தலைமுறையினருக்கு அதனை சுவார்ஸ்யமாக கொண்டு சென்றதில் ரோமன் ரெயன்ஸின் பங்கு அதிகம். இனி அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளில் ரோமன் ரெயன்ஸ் இல்லாதது wwe ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லுகுமேனியா என்றால் என்ன ?

இரத்தப்பபற்றுநோய் அல்லது லுகேமியா, இரத்தம் அல்லது எலும்பு மச்சத்தில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோய்.
நவீன ஆய்வு வரைவிளக்கணப்படி, லுகேமியா பல்வேறு நோய்களை ஒன்றடக்கிய ஒரு வியாதியாகும். இந் நோய் ஏற்பட பொதுவான காரணி எலும்பு மச்சையில் (bone marrow) உள்ள ஸ்டெம் செல்கள் என அறியப்படும் தண்டு உயிரணுக்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் வெள்ளை அணுக்களின் அபரிமித வளர்ச்சியால் ஏற்படும் கோளாறுகளாகும்.
அதாவது, உடல் இரத்த‌தில் இருக்கவேண்டிய வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகமான அளவில் இருப்பதனாலும் அத்தோடு முதிராத குறைபாடுள்ள வெள்ளை அணுக்கள் அதிகளவில் இரட்டிப்பாக்கப்பட்டு இருப்பதுமே இந்த இரத்த புற்று நோய்க்காண அடிப்படை காரணமாக அறியப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com