[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

நாளை 2-வது ஒரு நாள் போட்டி: மீண்டும் அசத்துமா இந்திய அணி?

ind-vs-wi-india-will-made-few-changes-made-for-the-second-odi

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஹெட்மையர் சதமடித்தார். அவர் 79 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் பாவெல் 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சேஹல் 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். கலீல் அகமது ஒரு விக்கெட் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 42.1 ஓவரிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 117 பந்துகளில், 15 பவுண்டரி, 8 சிக்சருடன் 152 ரன்களும் கேப்டன் விராத் கோலி 107 பந்துகளில் 21 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 140 ரன்களும் எடுத்தனர். விராத் கோலிக்கு இது 36 வது சதம். ரோகித் சர்மாவுக்கு 20 வது சதம் ஆகும். அம்பத்தி ராயுடு 22 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது விராத் கோலிக்கு வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் விராத் கோலி அடித்த சதம் சர்வதேசப் போட்டிகளில் அவர் அடிக்கும் 60-வது சதமாகும். ஒருநாள் போட்டியில் 36, டெஸ்ட் போட்டியில் 24 சதம் அடித்துள்ளார். மேலும், 60 சதங்களை மிகவும் விரைவாக எட்டிய வீரர் எனும் பெருமையை கோலி படைத்தார். ஏறக்குறைய 386 இன்னிங்ஸில் கோலி இந்தசாதனையை செய்திருக்கிறார். சச்சின் 424 இன்னிங்ஸில் இந்த சாதனையை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.

கவுகாத்தி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் பந்துவீச்சு எடுபடவில்லை. முக்கிய பந்துவீச்சாளர்களாக புவனேஷ்வர்குமாரும் பும்ராவும் இல்லாததன் பாதிப்பு தெரிந்தது. உமேஷ் யாதவ்வும் முகமது ஷமியும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். மிடில் ஆர்டரில் ஜடேஜாவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. விசாகப்பட்டினம் ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கலீல் அகமது நீக்கப்பட்டு கடந்த போட்டியில் விளையாடாத குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.  

வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கீரன் பாவெல், ஹெட்மையர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். கடந்த போட்டியில் டக் அவுட் ஆன, அனுபவ வீரர் சாமுவேல்ஸ் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். 

போட்டி நாளை பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close