'ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசுவது கடினம்' - பாக்., ஸ்பின்னர் ஷதாப் கான்

'ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசுவது கடினம்' - பாக்., ஸ்பின்னர் ஷதாப் கான்
'ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசுவது கடினம்' - பாக்., ஸ்பின்னர் ஷதாப் கான்
தான் பந்து வீசிய கடினமான பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் என்று குறிப்பிட்டுள்ளார் ஷதாப் கான்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல ஃபார்மில் இருக்கிறார். இந்த நிலையில் ஷதாப் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து ட்விட் செய்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், 'பவுலிங் வீசுவதற்கு மிகவும் கடினமான பேட்ஸ்மேன் யார்?' என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ஷதாப் கான், இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆகியோர்தான் பந்து வீசுவதற்கு கடினமான பேட்ஸ்மேன்கள் எனக் குறிப்பிட்டார். ஷதாப் கானின் இப்பதில் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com