Published : 22,Dec 2021 09:03 AM

'ரவி சாஸ்திரி கூறிய வார்த்தைகளால் மனம் நொறுங்கிப் போனேன்' - மவுனம் கலைத்த அஷ்வின்

Ravichandran-Ashwin-Recalls-Ravi-Shastri-Remark-That-Absolutely-Crushed-Him
சிட்னி டெஸ்ட் போட்டிக்குப் பின் ரவி சாஸ்திரி கூறிய வார்த்தைகளால் மனம் நொறுங்கிப்போனேன் எனத் தெரிவித்துள்ளார் அஷ்வின்.
 
இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் ஓரங்கட்டப்பட்ட சமயத்தில், 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இந்திய அணியின் ஸ்பின்னராக சேர்க்கப்பட்டார். சிட்னி டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் குல்தீப். அப்போதுதான் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
 
அந்த சமயத்தில் அஷ்வின் குறித்து மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசிய ரவி சாஸ்திரி, 'ஒவ்வொரு வீரருக்கும் முடிவு இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு குல்தீப் யாதவ் தான் எங்களது முதன்மையான ஸ்பின்னர்' என்றார். இதன் மூலம் அஷ்வின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என அவர் மறைமுகமாக குறிப்பிட்டது விவாதப்பொருளாக மாறியது.
 
image
இந்நிகழ்வு குறித்து நீண்ட காலத்திற்கு பின் மவுனம் கலைத்த அஷ்வின் கூறுகையில், ''ரவி சாஸ்திரி மீது பெரும் மதிப்பு வைத்துள்ளேன். ஆனால், சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின் அவர் கூறிய வார்த்தைகளால் மனம் நொறுங்கிப் போனேன். குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தியது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. நான் கூட ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தியது இல்லை. ஆனாலும், ஒரு வீரரை புகழ்வதற்காக, மற்றவரை கீழே தள்ளக் கூடாது அல்லவா?
 
நான் தூக்கியெறியப்பட்டதாக உணர்ந்ததால், அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள என் மனம் விரும்பவில்லை. மன வேதனையுடன் அறைக்கு திரும்பியதும் மனைவியிடம் பேசி சமாதானம் அடைந்தேன். பின்னர் இது என் அணியின் வெற்றி என்பதால், வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டேன்.
 
image
வயிற்று வலியுடன் அடிலெய்டு டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவின் 3 விக்கெட்டை கைப்பற்றினேன். இதை எல்லாம் மறந்து விட்டனர். மற்றவருடன் ஒப்பிட்டு பேசினர். ஆஸ்திரேலியாவின் லியான் 6 விக்கெட் வீழ்த்தினார். அஷ்வின் வெறும் 3 விக்கெட் தான் சாய்த்தார் என விமர்சித்தனர். இதனால் ஓய்வு பெறும் முடிவுக்கு வந்தேன். பின் நம்பிக்கையுடன் மீண்டேன். அடுத்து நடக்க உள்ள தென்னாப்பிரிக்கா தொடரில் சாதிப்பதே இலக்கு'' எனக் கூறினார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்