'போர்வீரனைப்போல வந்தார்' - அரையிறுதிக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரிஸ்வான்

'போர்வீரனைப்போல வந்தார்' - அரையிறுதிக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரிஸ்வான்
'போர்வீரனைப்போல வந்தார்' - அரையிறுதிக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரிஸ்வான்

ஆஸ்திரேலியாவுடனான நேற்றைய அரையிறுதி ஆட்டத்துக்கு முந்தைய தினம் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என அந்த அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இதில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஸ்வான் 52 பந்துகளில் 62 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார். இந்நிலையில் அவர் நேற்றைய ஆட்டத்துக்கு முன்தினம் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சையில் இருந்தார் என அந்த அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

''அவர் எப்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கலந்துகொள்வார் என சந்தேகம் எழுந்தது. நுரையீரல் பிரச்னை காரணமாக ரிஸ்வான் இரவு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மறுநாள் ஒரு போர் வீரன் போல களத்திற்கு வந்தார். அவருடைய தைரியம் பாராட்டத்தக்கது'' என மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,''உண்மையில் இது ஒரு முரண்பாடு தான். என் இதயம் எப்போதும் ஆஸ்திரேலியாவுக்காகத்தான் துடிக்கும். ஆனால், நான் பாகிஸ்தான் அணியின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com