'On the Way'; கிடைத்தது அனுமதி.. ஆக. 1ல் சென்னை வருகிறது பாக். ஹாக்கி அணி! #AsianChampionsTrophy2023

சென்னையில் நடைபெறும் ஹாக்கி ஆசிய கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி கொடுத்துள்ளது.
pakistan hockey
pakistan hockeypt web

வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இத்தொடருக்கான இந்திய அணி கடந்த மூன்று தினங்கள் முன் அறிவிக்கப்பட்டது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் உள்ள அணிக்கு துணை கேப்டனாக ஹர்திக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் விபரம்:

கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர் பதக், பிஆர் ஸ்ரீஜேஷ். டிஃபெண்டர்கள்: ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், சுமித், ஜுக்ராஜ் சிங், வருண் குமார். மிட்பீல்டர்கள்: ஹர்திக் சிங் (துணை கேப்டன்), ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா. முன்கள வீரர்கள்: ஆகாஷ்தீப் சிங், எஸ் கார்த்தி, குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், பவன், மந்தீப் சிங் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வருவதற்கு அந்நாட்டு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விளையாட்டு வாரியம் இதற்கான் அனுமதியை பெற்றுள்ளதாக பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் செயலாளர் ஹைதர் உசேன் இன்று (28/07/2023) தெரிவித்துள்ளார். ஆனாலும், அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆலோசகர் ஷானாஸ் ஷேக் உட்பட மூன்று அதிகாரிகள் விசாக்களுக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியை ஆகஸ்ட் 3 ஆம் தேதி மலேசியாவிற்கு எதிராக விளையாட உள்ளது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி இந்தியாவுடன் மோத உள்ளது.

பாகிஸ்தான் அணி; முஹம்மது உமர் பட்டா (கேப்டன்), அக்மல் ஹுசைன், அப்துல்லா இஷ்தியாக் கான், முஹம்மது அப்துல்லா, முஹம்மது சுஃப்யான் கான், எட்ஷாம் அஸ்லம், ஒசாமா பஷீர், அகில் அகமது, அர்ஷத் லியாகத், முஹம்மது இமாத், அப்துல் ஹனான் ஷாஹித், ஜகாரியா ஹயாத், ராணா அப்துல் வஹீத் அஷ்ரஃப் (துணை கேப்டன் ), ரோமன், முஹம்மது முர்தாசா யாகூப், முஹம்மது ஷாஜைப் கான், அஃப்ராஸ், அப்துல் ரஹ்மான், காத்திருப்பில் அலி ராசா, முஹம்மது பகீர், முஹம்மது நதீம் கான், அப்துல் வஹாப், வக்கார் அலி, முஹம்மது அர்சலான் மற்றும் அப்துல் கயூம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com