“எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டோம்” - வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர்!

வினேஷ் போகத்தின் தகுதி நீக்க விவகாரத்தில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம் என அவரது ஊட்டச்சத்து நிபுணர் தின்ஷா பர்திவாலா தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து நிபுணர், பிடி உஷா, வினேஷ் போகத்
ஊட்டச்சத்து நிபுணர், பிடி உஷா, வினேஷ் போகத்pt web
Published on

50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, இந்தியர்களின் இதயங்களை நொறுங்கச் செய்திருக்கிறது.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்ட்விட்டர்

நேற்று நடைபெற்ற சோதனையில் சரியான எடையில் இருந்த நிலையில், இன்று நடைபெற்ற சோதனையில் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கியூபாவின் குஸ்மான் லோபஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையுடன் மோத உள்ளார்.

ஊட்டச்சத்து நிபுணர், பிடி உஷா, வினேஷ் போகத்
வினேஷ் போகத் தகுதியிழப்பு.. இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையுடன் மோதப்போவது யார்?

வினேஷ் போகத்திற்கு ஆதரவாக தேசம் முழுவதும் குரல்கள் வலுத்து வருகிறது. இதுதொடர்பாக பேசிய இந்திய ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் பி.டி. உஷா, “வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளோம். மத்திய அரசும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியும் வினேஷ் போகத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. வினேஷ் போகத்திற்கு மருத்துவ உதவிகளையும், தார்மீக ஆதரவையும் வினேஷ் போகத்திற்கு வழங்கி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத்தின் ஊட்டச்சத்து நிபுணர் தின்ஷா பர்திவாலா இதுதொடர்பாக கூறுகையில், “வினேஷ் போகத்தின் தலைமுடியைக் குறைத்து உடல் எடையை குறைக்க முயன்றோம். இரவு முழுவதும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்தோம். எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com