ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் திரில் வெற்றி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் திரில் வெற்றி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் திரில் வெற்றி!
Published on

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி, திரில் வெற்றி பெற்றது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன. அடுத்து, சூப்பர் 4 சுற்று போட்டி நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் செல்லும். இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மற்றொரு ’சூப்பர் 4’ சுற்றுப் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. பங்களாதேஷ்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டு மீண்டும் திரும்பிய இம்ருல் கயாஸ் 72 ரன்களும் மஹ்மத்துல்லா 74 ரன்களும் தொடக்க ஆட்டக்காரர லிட்டன் தாஸ் 41 ரன்கள் எடுத்தனர்.  ஆப்கான் தரப்பில் அப்தாப் அலாம் 3 விக்கெட்டும் முஜிபுர் ரஹ்மான், ரஷித்கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வெறும் 3 ரன்களில் தோல்வியை தழுவியது. இதையடுத்து பங்களாதேஷ் அணி த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை சிறப்பாக வீசிய முஸ்தபிஷூர் இரண்டாவது பந்தில் ரஷித்கானின் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அதை எடுக்க முடியாமல் அந்த அணி தோல்வியை தழுவியது.

ஆப்கான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முமகது சேஷாத் 53 ரன்களும் ஹஸ்முல்லா ஷாகிதி 71 ரன்களும் கேப்டன் அஸ்கர் ஆப்கான் 39 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷ் தரப்பில் மோர்டாசா, முஸ்தபிஷூர் ரஹ்மான் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஷகிப் அல் ஹசன், மஹமுத்துல்லா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com