[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி செய்த சாதனை..!

dhoni-new-achievements

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியதில் ராகுல் டிராவிட் சாதனையை மகேந்திர சிங் தோனி முறியடித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஆசியக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மகேந்திர சிங் தோனி பல்வேறு வகையிலும் உதவி செய்து வருகிறார். நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், பாகிஸ்தானை இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்தது.

Read Also -> தொடர்ந்து தோல்வி: இலங்கை கேப்டன் திடீர் நீக்கம்!

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் தோனி புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடியதில் ராகுல் டிராவிட் சாதனையை தற்போது தோனி முறியடித்துள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக 504 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் டிராவிட் இருந்த நிலையில் தோனி அதனை முறியடித்து (505 போட்டிகள்) தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியாவிற்காக 664 போட்டிகளில் விளையாடி சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Read Also -> ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் திரில் வெற்றி!  

இந்திய அணிக்காக சர்வதேச அளவில் தோனி இதுவரை 90 டெஸ்ட், 322 ஒருநாள் போட்டிகள் மற்றும் 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் தோனி அடித்த மொத்த ரன்கள் 16,268 ரன்கள் ஆகும். இதில் 15 சதம், 102 அரை சதம் அடங்கும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close