இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்: 3 – 0 என்ற கோல்கணக்கில் ஹைதராபாத் அணியை பந்தாடிய மும்பை

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
ISL: Mumbai vs Hyderabad
ISL: Mumbai vs Hyderabadpt desk

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி - மும்பை அணிகள் மோதின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 18 ஆவது நிமிடத்தில் மும்பை அணி முதல் கோல் அடித்தது. தொடர்ந்து 31ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலும் அடிக்க முதல் பாதியில் 2க்கு பூஜ்ஜியம் என அந்த அணி முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கோல் அடிக்க ஹைதராபாத் அணி எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

ISL: Mumbai team
ISL: Mumbai teampt desk

இறுதியில் 90ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து 3க்கு பூஜ்ஜியம் என மும்பை அணி வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் ஒடிசா மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

புள்ளிப் பட்டியலில் மும்பை, மோகன் பகான், ஒடிசா மற்றும் கோவா ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

ISL: Mumbai vs Hyderabad
RR vs MI | 0 வெற்றி... கலாய்க்கும் ரசிகர்கள்! Hardik-க்கு ஹாட்ரிக் தோல்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com