ஒரே நாளில் 500 ரன்கள் என்ற இமாலய சாதனை! பாகிஸ்தானை பதம் பார்த்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்

ஒரே நாளில் 500 ரன்கள் என்ற இமாலய சாதனை! பாகிஸ்தானை பதம் பார்த்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்
ஒரே நாளில் 500 ரன்கள் என்ற இமாலய சாதனை! பாகிஸ்தானை பதம் பார்த்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்

இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இங்கிலாந்து அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாகவே நடந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றிருந்த நிலையில், தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாட பாகிஸ்தான் சென்றுள்ளது.

போட்டி நடைபெறுமா நடக்காதா சூழ்நிலை!

டெஸ்ட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் மற்றும் சப்போர்டிங் ஸ்டாஃப் என அனைவருக்கும் வைரஸ் அட்டாக் ஏற்பட்டது. இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக நடந்த பிராக்டிஸ் செஸ்ஸனில் ரூட் உட்பட 5 வீரர்களே பங்கேற்றனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதற்கொண்டு 14 வீரர்களுக்கு உடல்நிலை பாதிப்பானது போட்டியின் முந்தைய நாள் வரை நீடித்திருந்தது.

இதனால் போட்டியை மற்றொரு நாள் தள்ளி வைக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. போட்டி நடைபெறுமா நடைபெறாதா என்ற நிலையில் இன்று தொடங்கியது முதல் டெஸ்ட் போட்டி. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இங்கிலாந்து அணி படைத்த புதிய உலகசாதனை!

முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணியின் ஓபனர்கள் சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிக்சர் பவுண்டரிகள் என டி20 அணுகுமுறையில் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த விக்கெட்டை மற்றுமின்றி ரன்களையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள்.

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து ஒபனர்கள் முதல் செஸ்ஸன் முடிவில் 27 ஓவர்களில் 174 ரன்கள் சேர்க்க, இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் செஸ்ஸனில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் என்ற புதிய உலகசாதனையை படைத்தது இங்கிலாந்து அணி. இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக இந்திய அணியால் அடிக்கப்பட்ட 158 ரன்களை கடந்து இந்த சாதனையை படைத்தது இங்கிலாந்து.

ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் ஒரே நாளில் 4 சதங்கள்!

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் இருவரும் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர். 35.4 ஓவர்களில் 233 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதல் விக்கெட்ட இழந்தது இங்கிலாந்து அணி. 107 ரன்களில் ஜாஹித் மஹ்மூத் வீசிய பந்தில் லெக்-பை விக்கெட்டில் வெளியேறினார் பென் டக்கெட், அடுத்த ஓவரில் 122 ரன்கள் எடுத்திருந்த சால் கிராலியை பவுல்டாக்கி வெளியேற்றினார் ஹரிஸ் ராஃப்.

பின்னர் வந்த ஜோ ரூட் விரைவாகவே அவுட்டாகி வெளியேறினாலும், கைக்கோர்த்த விக்கெட் கீப்பர் ஒல்லி போப் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் விட்ட இடத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாலாபுறமும் பவுண்டரிகளாக விளாசி போப் சதமடித்து அசத்தி 108 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிக்சர் பவுண்டரிகள் என அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார் ப்ரூக் 81 பந்துகளில் 100 அடித்து அசத்த முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 500 ரன்களை தொட்டது.

ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் முதல் நாளில் சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஹாரி புரூக் 4 வீரர்கள் சதம் குவிப்பது இதுவே முதல் முறையாகும்.

முதல் நாள் முடிவில் 500 ரன்கள் என்ற இமாலய சாதனை!

ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் அடிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் 494 என்ற அதிகபட்ச ரன்களை முறியடித்து 506 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்த ஹாரி ப்ரூக்!

போட்டியின் 68ஆவது ஓவரில் சவுத் ஷகீல் வீசிய 6 பந்துகளையும் 6 பவுண்டரிகளாக மாற்றினார் ஹாரி புரூக். டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை சேர்த்துள்ளார் ஹாரி ப்ரூக்.

75 ஓவர்களில் மட்டும் இவ்வளவு ரன்கள்!

முதல் இன்னிங்ஸ் முடிவில் 75 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ரன்களை குவித்துள்ளது இங்கிலாந்து அணி. 101 ரன்களுடன் ஹாரி ப்ரூக்கும், 15 பந்துகளில் 34 ரன்கள் அடித்து பென் ஸ்டோக்ஸும் களத்தில் இருக்கின்றனர்.

பொதுவாக டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் வரை அதிகபட்சம் வீசப்படும். சில நேரங்களில் சூழலுக்கு ஏற்ப முன்கூட்டியே முடிக்கப்படும். ஆனால், இன்றையப் போட்டியில் 75 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளனர். மீதமுள்ள 15 ஓவர்களையும் வீசியிருந்தால், கடைசி நேரத்தில் இருந்த அதிரடிக்கு 550 ரன்களை கடந்திருக்கும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com