“என் வாழ்க்கையின் கருப்பு தினம்” - மிதாலி ராஜ் வேதனை

“என் வாழ்க்கையின் கருப்பு தினம்” - மிதாலி ராஜ் வேதனை

“என் வாழ்க்கையின் கருப்பு தினம்” - மிதாலி ராஜ் வேதனை
Published on

தனது செயல்பாடுகள் குறித்து பயிற்சியாளர் குற்றஞ்சாட்டியுள்ளது கவலை தருவதாக இந்திய மகளிர் அணி வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இந்த முக்கியமான போட்டியில் சாதனை வீரர் மிதாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். இத்தனைக்கும் அந்தத் தொடரில் மிதாலி ராஜ் சிறப்பாகவே விளையாடினார். 

இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் இருந்து திரும்பியதுமே, மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோரை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். பின்னர், பிசிசிஐ-க்கு எழுத்து பூர்வமாக மிதாலி ராஜ் அளித்த கடிதத்தில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்.

இதனையடுத்து, மித்தாலி ராஜ் நீக்கப்பட்ட விவகாரத்தில் பேசாமல் இருந்து வந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார் நேற்று தனது மவுனத்தை கலைத்தார். மிதாலி ராஜ் சொந்த சாதனைகளுக்காகவே விளையாடுகிறார். தன்னிச்சையாக செயல்படும் அவரை கையாள்வது கடினம் என ரமேஷ் பவார் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும்,  இங்கிலாந்து அணிக்கு எதிராக குறைவான பேட்டிங் சராசரி வைத்திருந்தார் என்ற கிரிக்கெட் புள்ளியல் அடிப்படியில் தான் மித்தாலி ராஜ் நீக்கப்பட்டார். வெற்றிக்கான அணியை தேர்வு செய்ய வேண்டும் என்பதே நோக்கம். காழ்ப்புணர்ச்சி காரணம் அல்ல” என்று பிசிசிஐ இடம் ரமேஷ் பவார் கூறினார். 

இந்நிலையில் தன்னை பற்றிய விமர்சனங்கள் வெளியான நாள் தன் வாழ்வின் கறுப்பு நாள் என மிதாலி ராஜ் கூறியுள்ளார். நாட்டிற்காக விளையாடியுள்ள தன்னுடைய 20 ஆண்டுகள் உழைப்பை சந்தேகப்படுகிறார்கள் என்றும் டுவிட்டரில் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.  “என்னுடைய கடின உழைப்பு, வியர்வை வீணாகிவிட்டது. என்னுடைய நாட்டுப்பற்றை சந்தேகப்படுகிறார்கள், திறமை மீது கேள்வி எழுப்புகிறார்கள்” எனவும் வருத்தத்துடன் மிதாலி ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com