SRH vs MI : வானவேடிக்கை காட்டுமா மும்பை அணி? - டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

SRH vs MI : வானவேடிக்கை காட்டுமா மும்பை அணி? - டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
SRH vs MI : வானவேடிக்கை காட்டுமா மும்பை அணி? - டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்றுப் போட்டிகளின் இறுதி போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

இரு அணிகளும் ஐபிஎல் களத்தில் 17 முறை மோதி விளையாடி உள்ளன. அதில் மும்பை 9 முறையும், ஹைதராபாத் 8 முறையும் வென்றுள்ளன. இந்தியாவில் நடைபெற்ற நடப்பு சீசனின் முற்பாதி ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றிருந்தது. 

ஆடும் லெவன் விவரம்... 

மும்பை இந்தியன்ஸ்!

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர்-நைல், ஜஸ்பிரித் பும்ரா, பியூஷ் சாவ்லா, ட்ரெண்ட் போல்ட். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜேசன் ராய், அபிஷேக் சர்மா, மணீஷ் பாண்டே (கேப்டன்), பிரியம் கார்க், அப்துல் சமத், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், முகமது நபி, உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல். 

ஹைதராபாத் அணியை கேப்டனாக மணீஷ் பாண்டே வழிநடத்துகிறார். 

இந்தப் போட்டியில் மும்பை அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும். அதாவது 250 வரை அடித்தால் மட்டுமே இத்தகைய வித்தியாசத்தை காட்ட முடியும். அதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இன்றைய போட்டியில் சிக்ஸர் மழை பொழிவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை இது ஆறுதல் வெற்றிதான். அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com