\
Mbappe Apologizes to China Over Mao Dictator Remark
எம்பாப்பே - மாவோReuters

மாவோ “சர்வாதிகாரி” கோபத்துக்குள்ளான சீனா.. மன்னிப்பு கேட்டார் எம்பாப்பே!!

மாவோ-வை ‘சர்வாதிகாரி’ எனக் குறிப்பிட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கால்பந்து வீரர் எம்பாப்பே சீன மக்களிடம் பொது மன்னிப்புக் கோரியுள்ளார்.
Published on: 

சீனாவின் முன்னாள் தலைவரும், நவீன சீனாவை உருவாக்கியவராகக் கருதப்படுபவருமான மாவோ-வை ‘சர்வாதிகாரி’ எனக் குறிப்பிட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கால்பந்து வீரர் எம்பாப்பே சீன மக்களிடம் பொது மன்னிப்புக் கோரியுள்ளார். சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கும் இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் எம்பாப்பே அந்நாட்டு தேசிய அணிக்கு கேப்டனாகவும் மற்றும் ரியல் மாட்ரிட் அணியிலும் விளையாடி வருகிறார். அவரின், சிறப்பான விளையாட்டையும், அணியின் வீரர்களை கட்டுப்படுத்தும் திறனையும் பாராட்டும் விதமாக எம்பாப்பேவை அவரது ரசிகர்கள் ‘சர்வாதிகாரி’ என அழைத்து வருகின்றனர்.

Reuters

இந்தச்சூழலில் தான், சமீபத்தில் நடைபெற்ற பாட்காஸ்ட் (podcast) கலந்துகொண்ட எம்பாப்பேவிடன், உங்களைப் பற்றி வெளியான மீம்களில் உங்களுக்குப் பிடித்தது எது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சீனாவின் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோவை, தன்னுடன் பொருத்தி வெளிவரும் மீம் குறித்துப் பேசினார். அப்போது, தான் பார்த்த வேடிக்கையான மீம்களில் இதுவும் ஒன்று என்றும், அதில் இருப்பவர் சீன சர்வாதிகாரியாக இருக்கலாம் என்றும் தெரிவித்ததார்.

எம்பாப்பேவின் இந்தக் கருத்துக்கு சீனாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, சீனாவில் எம்பாப்பே ஜெர்சிக்கள் சீனாவில் காட்சிப்படுத்துவது நீக்கப்பட்டன. எம்பாப்பே மற்றும் ஸ்பெயினின் லாலிகா கால்பந்து போட்டிகளை சீனாவில் ஒளிபரப்புச் செய்வதை தொலைக்காட்சிகள் நிறுத்தின. மேலும், எம்பாப்பேவுடன் செய்துகொண்ட வணிக ரீதியான ஒப்பந்ததை நிறுத்துவதாக 3 சீன நிறுவனங்கள் அறிவித்ததுடன், சீன மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துகளையும் செயல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அறிக்கை வெளியிட்டன.

Mbappe Apologizes to China Over Mao Dictator Remark
மண்ணில் தெரிந்த மஞ்சள் புள்ளி.. தோண்டியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. 1.2 கிலோ தங்கம் கிடைத்த பின்னணி!

இதனால், எம்பாப்பேவுக்குக்கும், லா லிகா தொடருக்கும், ரியல் மாட்ரிட் அணிக்கும் மிகப் பெரிய பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. இவ்வாறு, மாவோ-வை சர்வாதிகாரி என எம்பாப்பே கூறிய கருத்து சீனாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தான், சீன மக்களிடம் பொதுமன்னிப்பு கோருவதாக எம்பாப்பே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், பாட்காஸ்டில் தான் பேசிய கருத்து தவறாக அமைந்துவிட்டதை உணர்ந்ததாகவும், அது சீனாவிலும் உலகெங்கிலும் உள்ள சீன மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதைப் புரிந்துகொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், தனது வார்த்தைகளால் வருத்தமடைந்த அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், சீன மக்களையும் அவர்களின் வரலாற்றையும் தான் ஆழமாக மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Mbappe Apologizes to China Over Mao Dictator Remark
ரூ. 634 கோடி மோசடி புகார்.. கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com