கேல் ரத்னா பரிந்துரைப் பட்டியல் | விடுபட்ட பெயர்... மௌனம் கலைத்த மனுபாக்கர்
விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான கேல் ரத்னா பரிந்துரைப் பட்டியலில் தனது பெயர் விடுபட்டது குறித்து துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மௌனம் கலைத்துள்ளர்.
அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “விருதுக்கான எனது விண்ணப்பத்தில் பிழை இருந்திருக்கக் கூடும். விருதுகளும், அங்கீகாரங்களும் தனக்கு உத்வேகம் அளிக்கும் என்றாலும், அதுவே எனது இலக்கு அல்ல. நாட்டிற்காக விளையாடுவதே எனது பணி. விருதுகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து பதக்கங்களை வெல்வேன். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு ஊகங்களை யாரும் பரப்ப வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற மனு பாக்கரின் பெயர் கேல் ரத்னா பரிந்துரைப் பட்டியலில் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மனு பாக்கர் விண்ணப்பிக்கவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்த நிலையில், அவரது தந்தை ராம் கிஷன், முறையாக விண்ணப்பித்தும் பதிலில்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.