ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி
Published on

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கிய நிலையில் முதல் சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்னில் இன்று தொடங்கியது. இதில் மகளிர் பிரிவில் முதல் சுற்று போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கொலம்பியா வீராங்கனை கமிலா ஒசோரியாவை எதிர்த்து விளையாடினார். ஆறுக்கு மூன்று, ஆறுக்கு மூன்று என்ற நேர் செட்டில் கமிலா ஒசோரியாவை வீழ்த்தி நவோமி ஒசாகா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, தட்ஜனா மரியாவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முன்னதாக கொரோனா தடுப்பூசி சர்ச்சையில் சிக்கிய உலகின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டதால், அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார். இந்த முறை ஜோகோவிச் இடம்பெறாமல் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com