Published : 16,Jan 2022 06:46 PM
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: 4-0 என தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் 4 போட்டிகளில் மூன்றில் ஆஸ்திரேலியாவும், ஒன்று டிராவிலும் முடிந்த நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி ஹோபார்ட் நகரில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய 303 ரன்களும், இங்கிலாந்து அணி 188 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 155 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 271 ரன்கள் என்ற இலக்கை எட்டி, ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
ஆனால், அந்த அணி முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் எடுத்தது. எனினும், அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. முடிவில் இங்கிலாந்து 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 4 : 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.