ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ்(43),பவான் நேகி(35) ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய மும்பை அணி 19.5 ஓவர்களில் 165 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ரோகித் ஷர்மா அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார்.