நியூசிலாந்தை 'ஒயிட்வாஷ்' செய்யுமா இந்தியா? - இன்று கடைசி ஒருநாள் போட்டி!

நியூசிலாந்தை 'ஒயிட்வாஷ்' செய்யுமா இந்தியா? - இன்று கடைசி ஒருநாள் போட்டி!
நியூசிலாந்தை 'ஒயிட்வாஷ்' செய்யுமா இந்தியா? - இன்று கடைசி ஒருநாள் போட்டி!

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி இருக்கிறது. மறுபுறம் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரை கைப்பற்றிவிட்டதால் இந்திய அணியின் பந்து வீச்சு கூட்டணியில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் தற்போது இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, இந்தியா இதே புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இன்று இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, ஹென்றி நிகோல்ஸ் அல்லது மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர், டக் பிரேஸ்வெல் அல்லது ஹென்றி ஷிப்லி அல்லது ஜேக்கப் டப்பி, லோக்கி பெர்குசன், பிளேர் டிக்னெர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com