பயமுறுத்திய ஹாங்காங் ! பதற்றத்துக்கு பின் வெற்றிப் பெற்ற இந்தியா

பயமுறுத்திய ஹாங்காங் ! பதற்றத்துக்கு பின் வெற்றிப் பெற்ற இந்தியா

பயமுறுத்திய ஹாங்காங் ! பதற்றத்துக்கு பின் வெற்றிப் பெற்ற இந்தியா
Published on

ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோகித் ஷர்மா 23 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷிகர் தவான் மற்றும் அம்பதி ராயுடு ஜோடி நிலைத்து விளையாடியது. 60 (70) எடுத்திருந்த நிலையில், நவாஷ் வீசிய பந்தில் ராயுடு கேட்ச் அவுட் ஆனார்.

இதன்பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் உடன் இணைந்த தவான் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 105 பந்துகளில் சதம் அடித்தார். இதன்பின்னர் 127 (120) எடுத்த நிலையில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து எம்.எஸ். தோனி களமிறங்கினார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தோனி 0 (3) ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கும் 33 (38) ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் நிதானமாக விளையாடிய கேதர் ஜாதவ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

287 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஹாங் காங் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அன்ஷூமன் மற்றும் நிஸாகத் அதிரடியாக விளையாடினர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், கரீம் அகமது, ஷர்துல் தாக்கூர் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடியை இந்திய அணியால் பிரிக்கவே முடியவில்லை.

பின்பு ஹாங்காங் அணி 174 ரன்கள் எடுத்திருந்தபோது அன்ஷுமன் ராத் 73 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவின் சுழலில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து வெற்றிப் பெறும் நிலையில் இருந்த ஹாங் காங்கின் கனவு சரியத் தொடங்கியது. பின்பு, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிஸாகத் 92 ரன்களில் கரீம் அகமது பந்து வீச்சீல் அவுட்டானார்.

இதன், பின்பு ஹாங் காங்கின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக சரியத் தொடங்கியது. ஒரு பக்கம் குல்தீப் யாதவும், கரீம் அகமதும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஆனால் ஹாங் காங் வீரர்கள் தொடர்ந்து இலக்கை விரட்டி போராடிக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தியா தரப்பில் ஒருநாள் போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய கரீம் அகமது 3 விக்கெட்டுகளும், சாஹல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com