இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இந்தியாவின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர்...

இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இந்தியாவின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர்...

இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இந்தியாவின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர்...
Published on

இந்தியாவின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீரராக கே.எஸ்.ரஞ்சித்சிங்ஜி அறியப்படுகிறார். 

இன்றைய குஜராத் மாநிலத்தின் கத்தியவார் பகுதியில் பிறந்த ரஞ்சித்சிங்ஜி, நாவாநகர் பகுதியை ஆட்சி செய்துவந்த அரச குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீதான தீராத ஆர்வத்தால் இங்கிலாந்து சென்ற ரஞ்சித்சிங்ஜி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக அணியில் இடம்பிடித்தார். பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய அவருக்கு இங்கிலாந்து அணியில் விளையாடும் வாய்ப்பு கிட்டியது.

மான்செஸ்டர் மைதானத்தில் கடந்த 1896 ஜூலை 16ல் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடினார். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் எடுத்த ரஞ்சித்சிங்ஜி, இரண்டாவது இன்னிங்ஸில் 154 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். ஹாக்கி மட்டையால் கூட அவரால் பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட முடியும் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். மொத்தம் 15 சர்வதேச டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள அவர், அந்த போட்டிகள் அனைத்தையும் இங்கிலாந்து அணிக்காகவே விளையாடியுள்ளார்.

பார்வார்டு ஸ்ட்ரோக் வகையில் பேட்ஸ்மேன்கள் பந்துகளை உந்தித்தள்ளிக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில், பேக் பூட் எனப்படும் காலை பின்வைத்து ஆடு புதிய உத்தியை ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். வலதுகை பேட்ஸ்மேனான ரஞ்சித், அன்றைய காலகட்டத்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக புகழப்படுகிறார். மகாராஜா ஜாம் ஷாகேப் என்ற பெயரில் ரஞ்சித்சிங்ஜி நவாநகர் பகுதியின் அரசராக 1907ம் ஆண்டு முதல் இறக்கும் வரையில் (1933) ஆட்சி செய்தார். அவரது பெயரிலேயே இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை நடத்தப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com