\
Commonwealth Games 2026 India medals updates
Model imagechatgpt

2026 காமன்வெல்த்தில் பின்தங்கிய இந்தியா.. 1998-க்கு பின் மோசமான பதிவு.!

2026 காமன்வெல்த் விளையாட்டில் 28 ஆண்டுகளுக்கு பிறகு குறைவான தங்களை பதிவுசெய்துள்ளது இந்தியா.
Published on
Summary

கிளாஸ்கோவில் நடந்த 2026 காமன்வெல்த் போட்டியில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என 39 பதக்கங்கள் பெற்று நான்காவது இடத்தில் முடித்தது. 1998க்கு பின் இது இந்தியாவின் மிக மோசமான சாதனையாகும். ஆஸ்திரேலியா 171, இங்கிலாந்து 110, கனடா 62 பதக்கங்களுடன் முதல் மூன்று இடங்களை பிடித்த நிலையில், இந்திய அணியின் முன்னேற்றம் சறுக்கி ஏமாற்றம் தந்துள்ளது.

கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலம் என 39 பதக்கங்களை வென்றதோடு தன்னுடைய கணக்கை முடித்துக்கொண்டது.

திலீப் மஹாது காவிட், முகமது பாசில்
திலீப் மஹாது காவிட், முகமது பாசில்

ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இந்தியா 39 பதக்கங்களுடன் தர வரிசைப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 70 தங்கம், 45 வெள்ளி, 56 வெண்கலப் பதக்கங்களுடன் 171 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதலிடத்தையும். 29 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களுடன் 110 பதக்கங்களை வென்று இங்கிலாந்து இரண்டாவது இடத்தையும், 19 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் 62 பதக்கங்களை வென்று கனடா 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தசூழலில் 2026 காமன்வெல்த் விளையாட்டில் 1998ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா மிகமோசமாக செயல்பட்டுள்ளது.

Commonwealth Games 2026 India medals updates
94 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஜம்மு-காஷ்மீர் வீரர்.. பும்ராவிற்கு பதில் அகிப் நபி!

1998ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் வெறும் 7 தங்கங்களை மட்டுமே வென்றிருந்த இந்தியா, மொத்தம் 25 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. அதற்குபிறகு அடுத்தடுத்த விளையாட்டு போட்டிகளில் முன்னேற்றம் கண்ட இந்தியா, 2010 காமன்வெல்த் விளையாட்டில் 39 தங்கங்களுடன் மொத்தமாக 101 பதக்கங்களை வென்று சதமடித்து சாதனை படைத்தது. அந்த ஆண்டு இந்தியா 2வது இடத்தில் முடித்தது.

ஹர்ஷ் சிங்
ஹர்ஷ் சிங் PTi

அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்தமாக 66, 61 பதங்கள் என வென்றிருந்தாலும், தங்கத்தில் 20-க்கும் குறைவாக இந்தியா சென்றதே இல்லை. அந்தவகையில் நடந்துமுடிந்த 2026 காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா வெறும் 13 தங்கப்பதக்கங்களை மட்டுமே வென்று ஏமாற்றம் அளித்துள்ளது. நடப்பு ஆண்டில் கடந்தகாலங்களில் வெல்லாத பிரிவில் கூட இந்தியா பதக்கம் வென்றிருந்தாலும், காமன்வெல்த் விளையாட்டில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவந்த இந்திய அணி சறுக்கியுள்ளது ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

Commonwealth Games 2026 India medals updates
CWG 2026 | 39 பதக்கங்கள்.. 4ஆவது இடம்.. வாகை சூடிய இந்தியா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com