\
India drew against panama
India drew against panamaANI

இந்திய கால்பந்தின் அசத்தல் இரவு : டாப் அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம்.. வீரர் செய்த தியாகம்!

FIFA உலகக்கோப்பையில் ஆடிய டாப் அணிக்கு எதிராக இந்தியா அபாரமாக செயல்பட்டுள்ளது இந்திய கால்பந்தின் வளர்ச்சியை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
Published on: 
Summary

பெங்களூருவில் நடந்த சர்வதேச நட்பு போட்டியில், FIFA தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள பனாமாவை இந்தியா 1-1 என டிராவில் கட்டுப்படுத்தி வரலாற்றுச் சிறப்பை பதிவு செய்தது. 138-வது இடத்தில் இருக்கும் இந்தியா, டாப் 50 அணிக்கு எதிராக 2012 கேமரூன் ஆட்டத்திற்குப் பிறகு முதல் முறையாக டிரா பெற்றுள்ளது. ரியான் வில்லியம்ஸ் இந்தியாவுக்காக முதல் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில், FIFA தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள பலமான பனாமா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இந்தியா சமீபத்திய ஆண்டுகளில் தரவரிசையில் 100 இடங்களுக்கு வெளியே உள்ள அணிகளுக்கு எதிராகவே திணறி வரும் நிலையில், இந்த போட்டியில் மோசமான தோல்வியை சந்திக்குமா என அச்சம் நிலவியது.

ஆனால் ஆட்டம் தொடங்கியதில் இருந்து அட்டகாசமாக ஆடிய இந்திய அணி பனாமா அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் இந்திய வீரர் ரியான் வில்லியம்ஸ் (Ryan Williams )தனது அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். எனினும் 68-வது நிமிடத்தில் பனாமா அணி பதில் கோல் அடித்தது. அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயன்ற நிலையில், அது சாத்தியமாகவில்லை. இதன் காரணமாக இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

சர்வதேச FIFA தரவரிசையில் இந்தியா 138-வது இடத்தில் இருக்கும் வேளையில், தங்களை விட 94 இடங்கள் முன்னணியில் உள்ள பனாமா அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு அப்போது FIFA தரவரிசையில் 43-வது இடத்தில் இருந்த ஆப்பிரிக்காவின் வலுவான அணியான கேமரூனுக்கு எதிராக ஆட்டநேர முடிவில் 2-2 என டிரா செய்தது. பின்னர் பெனால்டி ஷூட்-அவுட்டில் 5-4-க்கு என கேமரூனை வீழ்த்தி இந்தியா நேரு கோப்பையைக் கைப்பற்றியது. அதன் பின்னர் டாப் 50 அணிகளுக்கு எதிராக இந்தியா டிரா செய்வது இதுவே முதல்முறையாகும்.

Ryan williams
Ryan williams

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் (Ryan Williams )கோல் அடித்தார். அவர் இந்திய அணிக்கு ஆடவேண்டும் என ஆஸ்திரேலியா குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட்டையே துறந்து இந்திய அணிக்கு ஆட தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

India drew against panama
CSK-வைத் தொடர்ந்து பயிற்சியாளரை மாற்றிய மும்பை அணி.. யார் இந்த லூக் வில்லியம்ஸ்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com