இந்தியா - ஆஸி., கடைசி டெஸ்ட் போட்டி: நேரில் கண்டுகளிக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா - ஆஸி., கடைசி டெஸ்ட் போட்டி: நேரில் கண்டுகளிக்கிறார் பிரதமர் மோடி!
இந்தியா - ஆஸி., கடைசி டெஸ்ட் போட்டி: நேரில் கண்டுகளிக்கிறார் பிரதமர் மோடி!

அகமதாபாத்தில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தொடங்க உள்ள கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்வையிடுகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஏனென்றால் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும். மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இறுதிச்சுற்றற்கு முன்னேறிவிட்டது. இக்காரணத்தால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கும் விதமாக முதல் நாள் ஆட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் நேரில் பார்க்க உள்ளனர். மேலும் இன்றைய போட்டியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டாஸ் போடுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

இரு பிரதமர்கள் வருகையை முன்னிட்டு அகமதாபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசித்தபின், வர்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் மும்பை செல்கிறார்.

தற்போது இருவரும் நரேந்திர மோடி மைதானத்திற்கு வந்துடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com