இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்: 75% பார்வையாளர்களுக்கு மேற்கு வங்க அரசு அனுமதி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்: 75% பார்வையாளர்களுக்கு மேற்கு வங்க அரசு அனுமதி
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்: 75% பார்வையாளர்களுக்கு மேற்கு வங்க அரசு அனுமதி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் நடைபெறும் கொல்கத்தாவில் 75% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75% பார்வையாளர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. விளையாட்டு அரங்குகளில் 75% ரசிகர்கள் அனுமதியுடன் போட்டிகள் நடக்கலாம் என மேற்கு வங்க அரசு அனுமதி அளித்ததையடுத்து ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 50,000 ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருட இறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றபோது 70% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: ஐபிஎல் 2022 மெகா ஏலம்: ஸ்ரேயாஸ் அய்யர் முதல் டேவிட் வார்னர் வரை; கேப்டன் ரேஸில் 5 வீரர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com