\
ronaldo - jesus
ronaldo - jesusreuters

‘ரொனால்டோ வரவிரும்பினால் வரலாம்..’ மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பயிற்சியாளர் ஜீசஸ்!

நவீன கால்பந்து உலகின் ஜாம்பவனாக போற்றப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும், போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Published on: 
Summary

போர்ச்சுகல் அணியில் ரொனால்டோவின் எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். அணிக்கு திரும்ப விரும்பினால் அவர் தேர்வாகலாம் என்றாலும், முந்தைய சாதனைகள் தனிப்பட்ட சலுகைகளை வழங்காது என அவர் கூறினார். ரொனால்டோவின் முடிவுகள் மற்றும் ஜீசஸின் நிலைப்பாடு அணியின் எதிர்காலத்தை சிக்கலாக்கியுள்ளது.

சமீபத்தில் போர்ச்சுக்கல் தேசிய அணியிலிருந்து தான் விலக விரும்புவதாகவும், அதற்கான காரணம் என்ன என்பதை நான் விரைவில் கூறுவேன் என்றும் நட்சத்திர கால்பந்துவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பகிரங்கமாக அறிவித்தார். அடுத்த வாரம் அவர் தன்னுடைய விளக்கத்தை செய்தியாளர் சந்திப்பில் கொடுக்கவிருக்கிறார். பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுக்கும், ரொனால்டோவுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

போர்ச்சுக்கல் பயிற்சியாளர் ஜீசஸ்
போர்ச்சுக்கல் பயிற்சியாளர் ஜீசஸ்

நேஷன்ஸ் கால்பந்து லீக்கில் நார்வேக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவை மாற்று வீரராக அமர வைத்ததாலும், டென்மார்க்கிற்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்க மாட்டார் என்று கூறப்பட்டதாலும், பயிற்சியாளரின் முடிவின் மேல் அதிருப்தி அடைந்த ரொனால்டோ தேசிய அணியிலிருந்து விலகுவதாக முடிவுசெய்துள்ளார்.

ronaldo
ronaldoreuters

ஆனால் இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் ‘ரொனால்டோ துரோகம் செய்யப்பட்டதாக உணர்ந்ததாக’ ஸ்பானிய பத்திரிகையாளரும் ரொனால்டோவின் நெருங்கிய நண்பருமான எடு அகுய்ரே தெரிவித்துள்ளார். போட்டியில் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு, ரொனால்டோ மற்றும் பயிற்சியாளர் ஜீசஸ் ஆகியோருக்கு இடையே ஒரு மூடிய அறைக்குள் சந்திப்பு நடந்ததாகவும், அதில் ஜீசஸ் ரொனால்டோவிடம் மன்னிப்புக் கேட்டதோடு, பொதுவெளியிலும் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால், மூடிய அறையில் பேசியதற்கு மாறாக, பத்திரிகையாளர் சந்திப்பில் நார்வேக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவை விளையாட வைக்காத தனது முடிவை ஜீசஸ் நியாயப்படுத்தினார். இதனால் ரொனால்டோ தன்னை சிறுமைப்படுத்திவிட்டதாகவும், துரோகம் இழைத்துவிட்டதாகவும்’ கருதி அணியிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

ronaldo - jesus
‘ரொனால்டோ மட்டுமே வீரர் இல்லை..’ பெரிதாக வெடிக்கும் ஜீசஸ் vs ரொனால்டோ மோதல்!

இந்தசூழலில் மீண்டும் போர்ச்சுக்கல் தேசிய அணிக்கு ரொனால்டோ திரும்புவாரா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் பயிற்சியாளர் ஜீசஸ், ’ரொனால்டோ அணிக்கு மீண்டும் திரும்ப விரும்பினால், அடுத்த சர்வதேச போட்டிகளுக்கான அணியில் அவர் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் தனது கால்பந்து வாழ்க்கையை எப்படி முடிக்கவேண்டும் என்பதை அவரேதான் முடிவு செய்ய வேண்டும். இதில் நான் முடிவு எடுக்க எதுவும் இல்லை.

ஒரு வீரரின் முந்தைய கால சாதனைகள் அல்லது அந்தஸ்தானது அணியில் அவருக்கு எந்தவித தனிப்பட்ட சலுகைகளையும் தந்துவிடாது. எந்தவொரு வீரரோ அல்லது கால்பந்து சங்கத்தின் தலைவரோ எனது முடிவுகளை மாற்ற முடியாது. இந்த விவகாரத்தில் தான் யாருக்கும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும், ரொனால்டோவிடம் முதலில் பேசியபோது, 'நீங்கள் எனக்குத் தேவை. நீங்கள் எனக்கு அருகில் இருக்க வேண்டும்: நீங்கள் விளையாடினாலும் சரி, விளையாடாவிட்டாலும் சரி. நீங்கள் எனக்குத் தேவை' என்று சொன்னேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன் என கூறியுள்ளார். இதன்மூலம் மீண்டும் அணிக்கு வந்தாலும் அவர் ரொனால்டோவை பெஞ்சில் அமரவைக்கலாம் என்று கூறுவதாகவே உள்ளது.

Jesus vs Ronaldo clash erupts
Jesus vs Ronaldo clash eruptsai

இந்தசூழலில் பயிற்சியாளராக தனது முடிவில் சரியாக இருக்கும் ஜீசஸும், வீரராக தனது முடிவில் சரியாக இருக்கும் ரொனால்டோவும் பிரச்னையை சரிசெய்வார்களா? அல்லது ரொனால்டோ சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பையில் விளையாடாமலேயே ஓய்வை அறிவிப்பாரா என்ற குழப்பம் அதிகரித்துள்ளது.

ronaldo - jesus
அவமானப்படுத்தப்பட்டாரா ரொனால்டோ..? போர்ச்சுகல் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறியதால் அதிர்ச்சி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com