'என்னிடம் வலிமை பட அப்டேட் கேட்டது மறக்க முடியாதது' – இங்கிலாந்து வீரர் மொயீன் அலி

'என்னிடம் வலிமை பட அப்டேட் கேட்டது மறக்க முடியாதது' – இங்கிலாந்து வீரர் மொயீன் அலி
'என்னிடம் வலிமை பட அப்டேட் கேட்டது மறக்க முடியாதது' – இங்கிலாந்து வீரர் மொயீன் அலி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் தன்னிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டதே அங்கு தனது மறக்க முடியாத நினைவு என இங்கிலாந்து கிரிக்கெட் ஆல்ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் இடைவிடாத ஆரவாரம் மற்றொரு மறக்க முடியாத அனுபவம் என்று மொயீன் அலி தெரிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கும் மொயீன் அலி, தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் தொடர்பான சில கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது. அதில், மொயீன் அலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது, மொயீன் அலியிடம் ரசிகர்கள் அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைப்படிக்க...' இளம் மருத்துவர்களை கால்பந்து போல கருதாதீர்கள்' - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com