\
இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணிX Page

ஹாக்கி சாம்பியன்ஸ் தொடர்: மூன்றாவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் அணி

ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை மூன்றாவது முறையாக இந்திய மகளிர் அணி வென்று அசத்தியுள்ளது.
Published on

ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை மூன்றாவது முறையாக இந்திய மகளிர் அணி வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி - சீனா மகளிர் அணியை நேற்று எதிர்கொண்டது.

பரபரப்பான போட்டியில் இந்திய அணி, 1 - 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. இந்திய வீராங்கனை தீபிகா ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் கோல் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணிpt desk

இந்தத் தொடர் முழுவதும் தீபிகா அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 11 கோல்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீன அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிர் அணி
இந்தியாவிலேயே முதன்முறையாக... 24 மணி நேரமும் செயல்படும் ஆன்லைன் நீதிமன்றம்! எங்கே தெரியுமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com