இன்று 4வது போட்டி: வரலாறு படைக்குமா விராத் டீம்?

இன்று 4வது போட்டி: வரலாறு படைக்குமா விராத் டீம்?
இன்று 4வது போட்டி: வரலாறு படைக்குமா விராத் டீம்?

இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெறுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் 4-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. 
ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்பில் ஆயத்தமாகி வருகிறது. 

இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் இதுவரை ஒருமுறை கூட ஒருநாள் தொடரை வென்றதில்லை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதல்முறையாக தென்னாப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாறு படைக்க வாய்ப்பிருக்கிறது. 

இந்திய அணியில் சேஹல், குல்தீப் சுழலும் கோலி, தவானின் ஃபார்மும் சிறப்பாக இருப்பதால் இந்திய அணி நம்பிக்கையுடன் களமிறங்கும். டி வில்லியர்ஸின் வருகை தென்னாப்பிரிக்க அணிக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com