\
Salima Tete
Salima Tetehockey india

தங்கம் வென்ற கேப்டன்.. சிக்னல் இல்லாத சொந்த ஊர்! நிலைமை மாறுமா?

விளையாட்டுத் தளத்தில் இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்திய ஒரு நாயகி, தன் சொந்த ஊருக்குச் செல்லும்போது வெளி உலகத் தொடர்பையே இழந்து நிற்கும் ஒரு முரண்நிலை இருக்கிறது. கவனிக்கப்பட வேண்டி விஷயம் இது...
Published on: 
Summary

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற சலீமா தேதே, சொந்த ஊரான பர்கி சப்பாரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகிறார். மொபைல் நெட்வொர்க் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாத நிலையில், அவரது தந்தை நிலம் கொடுக்க முன்வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குத் தலைமை தாங்கி, 44 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றித் தந்தார் கேப்டன் சலீமா தேதே (Salima Tete). ஆனால், சாம்பியனாகத் தன் சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பர்கி சப்பார் (Barki Chhapar) கிராமத்திற்குத் திரும்பும்போதெல்லாம், தம்மை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாது என முன்கூட்டியே அனைவருக்கும் செய்தி அனுப்பவேண்டிய அவல நிலையில் இருக்கிறார்.

Salima Tete
Salima Tetehockey india

காரணம், அவரது கிராமத்தில் அடிப்படை மொபைல் நெட்வொர்க் சேவையோ, முறையான குடிநீர் வசதியோ இல்லை, அவசரத் தேவைகளுக்கோ முக்கியமான மின்னஞ்சல்களைப் பார்ப்பதற்கோ கூட கிராமத்தைவிட்டு வெளியே நகர்ந்துதான் சிக்னல் தேட வேண்டியுள்ளது. புதிய மொபைல் கோபுரம் அமைப்பதற்காக சலீமா தேதேயின் தந்தையே சொந்த நிலத்தைத் தர முன்வந்தும், இதுவரை எந்த அதிகாரபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசத்திற்கு வரலாற்றுப் பெருமையை பெற்றுத்தந்த நாயகியின் வெற்றியை அவரது கிராமம் அடிப்படை வசதிகளோடு கொண்டாட வேண்டியது அவசியமே..

Salima Tete
கொய்யாப் பழம் கொண்டு பந்துவீச்சு பயிற்சி! முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com