’திருமணமும் விவாகரத்தும் கடினம்; இதில்’ - வைரலாகும் சானியா மிர்சாவின் இன்ஸ்டா ஸ்டோரி.. காரணம் என்ன?

விவாகரத்து குறித்து இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை வைத்திருக்கும் இன்ஸ்டா ஸ்டோரியால் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சானிய மிர்சா
சானிய மிர்சாபுதிய தலைமுறை

டென்னிஸ் உலகில் சிறுவயது முதலே தடம்படித்து எண்ணற்ற சாதனைகளை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தவர் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா. இவர், கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் பெரும் விவாதப்பொருளாக மாறியபோதும், சானியா இந்தியாவுக்காக தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார். சோயிப் மாலிக்கும் பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில், சானியா மற்றும சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. எனினும், இதுகுறித்து இருதரப்பினரும் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. ஆனால், சோயிப் மாலிக்குடன் இருக்கும் புகைப்படங்களை மட்டும், தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார்.

இதையும் படிக்க: ஓடும் ரயிலில் பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்... வைரல் வீடியோவால் சஸ்பெண்ட்?

இந்த நிலையில், சானியா மிர்சா தற்போது தன்னுடைய வலைதளப் பக்கத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். அவர் வைத்துள்ள இன்ஸ்டா ஸ்டோரியில்,

’திருமணம் என்பது கடினமானது. விவாகரத்தும் கடினமானதுதான். இதில் உங்களுக்கான கடினமானதைத் தேர்வுசெய்யுங்கள். உடல் பருமனாக இருப்பதும், ஃபிட்டாக இருப்பதும் கடினமானதுதான்.

இதில் உங்களுக்கான கடினமான ஒன்றை தேர்வுசெய்யுங்கள். கடனில் இருப்பதும், நிதி விஷயத்தில் மிகச்சரியாக இருப்பதும் கடினமானதுதான். இதில் ஒரு கடினத்தை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.

தொடர்புடன் இருப்பதும், தொடர்பு இல்லாமல் இருப்பதும் கடினமானதுதான். இதில் கடினமானதைத் தேர்வு செய்யுங்கள். வாழ்க்கை என்பது எளிதாக இருக்காது. அது எப்போதும் கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால் நாம் எந்தமாதிரியான கடினம் என்பதை நாம் தேர்வு செய்யலாம். புத்திசாலித்தனமான தேர்ந்தெடுங்கள்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், சானியா மிர்சா தன் கணவரை விவாகரத்து செய்யப்போகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக, சோயிப் மாலிக்கும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வைத்திருந்த நீண்டகால பதிவான ‘ஒரு சூப்பர் பெண்மணிக்கு கணவன்’ என்பதைக் கடந்த ஆண்டு நீக்கியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2024: 14 நாட்களில் 7,500 பேர்: ’இனியும் பணிநீக்கம் தொடரும்’ மறைமுகமாக எச்சரித்த சுந்தர் பிச்சை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com