2024: 14 நாட்களில் 7,500 பேர்: ’இனியும் பணிநீக்கம் தொடரும்’ மறைமுகமாக எச்சரித்த சுந்தர் பிச்சை

தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கைகள் இருக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளாதகாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கூகுள் சுந்தர் பிச்சை
கூகுள் சுந்தர் பிச்சைட்விட்டர்

கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. இதையடுத்து உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அனைத்தும் தத்தம் ஊழியர்களை கொத்துக்கொத்தாக பணி நீக்கம் செய்தன.

அந்தவகையில் கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் 12,000 பேரை பணிநீக்கம் செய்திருந்தது. தவிர, பொது முடக்கத்தின்போது செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கையாளப்பட்ட ரோபோக்களையும் நீக்கியது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த ஆண்டு தொடக்கத்திலும் நூறுக்கும் மேற்பட்டவர்களைப் பணிநீக்கம் செய்தது. இது, உலக அளவில் விமர்சனத்துக்குள்ளானது.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சைFile image

இந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தில் பணி நீக்க நடவடிக்கை தொடரும் என கூகுளின் தலைமை செயல் அதிகாரியான இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள சுற்றறிக்கை ஒன்றில், “இந்த பணிநீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டின் அளவில் இருக்காது. அதேபோல் எல்லா குழுக்களிலும் இருக்காது. சில ஊழியர்களுக்கு இவை முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டன. சில பணிக்குழுக்களில் ஆண்டு முழுவதும் பணிகளின் அவசியம் குறித்து ஆராயப்பட்டு வரும். அவ்வப்போது சில பணிகள் தேவையற்று போகலாம்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆசையாய் ’பீட்சா’ கொடுத்த மனைவி.. ஆத்திரத்தைக் காட்டிய கணவர்.. இறுதியில் நடந்த விபரீதம்!

இந்தச் சுற்றறிக்கையின்மூலம் பணிநீக்க அறிவிப்புகள் இருக்கலாம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையில் கூகுள் நெஸ்ட், பிக்ஸல், ஃபிட்பிட், விளம்பர விற்பனை பிரிவு போன்றவை அதிகமாக பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கைநுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முதலீடு செய்வதன் தொடர்ச்சியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் காரணமாக அடுத்த சில மாதங்களில் மேலும் பணிநீக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Layoffs.fyi. இணையதளத்தின்படி நடப்பு ஜனவரி மாதத்தில் மட்டும் 46 தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதுவரை 7,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இதையும் படிக்க: ஓடும் ரயிலில் பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்... வைரல் வீடியோவால் சஸ்பெண்ட்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com