“அவரின் ஆட்டம் என்னை ஈர்த்துவிட்டது” வருண் சக்ரவர்த்தியை மெச்சிய சச்சின் ! 

“அவரின் ஆட்டம் என்னை ஈர்த்துவிட்டது” வருண் சக்ரவர்த்தியை மெச்சிய சச்சின் ! 
“அவரின் ஆட்டம் என்னை ஈர்த்துவிட்டது” வருண் சக்ரவர்த்தியை மெச்சிய சச்சின் ! 

கிரிக்கெட்டின் கடவுள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை எல்லோரும் செல்லமாக அழைப்பது உண்டு. 

அப்படிப்பட்ட கிரிக்கெட் கடவுளின் மனதை வென்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய டி20 அணியிலும் இடம் பெற்றுள்ளார். 

இந்நிலையில் வருண் சக்கரவர்த்தியை பாராட்டியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

“இந்த தொடரில் வருண் சிறப்பாக பந்துவீசி வருகிறார். வெகு சில ஆட்டங்களில் மட்டுமே ரன்களை கொடுத்துள்ளார். நரைன் மாதிரியான பவுலர்கள் பந்துவீசும் போது பேட்ஸ்மேன்கள் மறுமுனையில் பந்து வீசும் பவுலர்களை தான் பேட்ஸ்மேன்கள் அதிகம் டார்கெட் செய்வார்கள். அதனால் பிரஷர் முழுவதும் அந்த பவுலர் மீதே இருக்கும். 

ஆனால் அதை முறையாக கையாள்வதோடு, தொடர்ச்சியாக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் வருணின் ஆட்டம் என்னை அதிகம் ஈர்த்து விட்டது. 

அவரது தன்னம்பிக்கையின் காரணமாக பந்து வீச்சில் வேரியேஷனும் காட்ட முடிகிறது. அவரை போல தன்னம்பிக்கை உள்ள பவுலர்கள் பந்து வீசும் போது எதை செய்ய வேண்டுமென திட்டமிடுகிறார்க்ளோ, அதை செயல்படுத்தவும் முடியும்” என சொல்லியுள்ளார் சச்சின்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com