\
france vs spain clash
france vs spain clashweb

முதல் அரையிறுதி| சிறந்த டிஃபன்ஸ் vs சிறந்த அட்டாக்.. ஸ்பெயினை வீழ்த்துமா பிரான்ஸ்? பலம், பலவீனம்?

நடப்பு கால்பந்து உலகக்கோப்பை தொடரின் 2 சிறந்த அணிகளுக்கு இடையேயான மோதல் என்பதால் பிரான்ஸ்-ஸ்பெயின் மோதும் முதல் அரையிறுதி அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

கால்பந்து உலகக்கோப்பை அரையிறுதியில் ஸ்பெயின்-பிரான்ஸ் மோதல் 16 கோல்கள் அடித்த பிரான்ஸ் அட்டாக், 1 கோல் மட்டுமே விட்டுக்கொடுத்த ஸ்பெயின் டிஃபன்ஸ் எதிர்கொள்ளும் போட்டியாக மாறியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஸ்பெயினிடம் தொடர்ந்து தோற்ற பிரான்ஸ் அணிக்கு பழி தீர்க்கும் சவாலான வாய்ப்பாக உள்ளது.

கால்பந்து உலகக்கோப்பையில் குறைவான கோல் விட்டுக்கொடுத்த அணிக்கும், அதிகமான கோலடித்த அணிக்கும் இடையேயான போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்வி எழுப்பினால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்.. வெற்றியாளரை கணிப்பதை உங்களுக்கு சவாலானதாக இருக்கமல்லவா..? அப்படியான ஒரு போட்டியாக தான் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதல் பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியை ‘இறுதிப்போட்டிக்கு முந்தைய இறுதிப்போட்டி’ என்று சொன்னால் கூட மிகையாகாது. நடப்பு சீசனில் 16 கோல்கள் அடித்திருக்கும் பிரான்ஸ் அணியும், 1 கோல் மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கும் ஸ்பெயின் அணியும் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. ஒரு பக்கம் சிறந்த அட்டாக்கிங் வைத்திருக்கும் அணி, மற்றொரு பக்கம் சிறந்த டிஃபன்ஸ் வைத்திருக்கும் அணி என இரண்டு தலைசிறந்த அணிகள் மோதும் போட்டி அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை என்றாலே எம்பாப்பேவும், அவருடைய அணியும் பட்டையை கிளப்பும் அணியாக இருந்தாலும், ஸ்பெயின் அணியை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது. ஏனென்றால் ஸ்பெயின் அணி கடந்த 2 ஆண்டுகளாக பிரான்ஸ் இடம் தோற்றதே கிடையாது.

france vs spain clash
”France எங்களை விட வலிமையான அணி கிடையாது..” யமால் கருத்திற்கு ஃபிரான்ஸ் தரப்பில் பதிலடி!

கடந்த 2 ஆண்டில் உயர்ந்த ஸ்பெயின் கைகள்..

முக்கியமாக 2024 யூரோ கோப்பை அரையிறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி ஸ்பெயினிடம் 2-1 என தோல்வியடைந்தது. அதன் பிறகு 2025 UEFA நேஷன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியை நினைவுகூர்ந்தால், அதிலும் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி ஸ்பெயினிடம் வீழ்ந்தது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2025-இல் விளையாடிய அதே பிரான்ஸ் அணிதான் தற்போது அரையிறுதியில் விளையாடவிருக்கும் அணி.

எம்பாப்பே, டூயே, ஒலிஸ் மற்றும் டெம்பலே போன்ற தற்போதைய நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர்கள் களத்தில் இருந்தும், ஸ்பெயினின் இளம் வீரர்களான யமால், ஒயாசபால், நிகோ வில்லியம்ஸ் மற்றும் டானி ஓல்மோ ஆகியோரின் கூட்டணிக்கு எதிராக அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. 2024 யூரோ கோப்பையிலும் ஒலிஸ் இல்லாவிட்டாலும், எம்பாப்பே, டெம்பலே மற்றும் பார்கோலா ஆகியோர் விளையாடியும் பிரான்ஸ் தோல்வியடைந்தது.

இந்த ஸ்டேட்ஸ் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்போதைய பிரான்ஸ் அணியில் எம்பாப்பே, டெம்பலே, ஒலிஸ் அனைவரும் சிறந்த ஃபார்மில் இருந்துவருகின்றனர்.

france vs spain clash
500 குழந்தைகளுக்கு சூட்டப்பட்ட ’எர்லிங் ஹாலண்ட்’ பெயர்.. நாடு கடந்து விரும்பப்படும் நார்வே வீரர்!

Head to Head

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இரண்டு அணிகளும் உலகக்கோப்பையில் இதுவரை ஒருமுறை மட்டுமே மோதியுள்ளன. 2006 உலகக்கோப்பையில் ரவுண்ட் 16 மோதலில் பிரான்ஸ் அணி ஸ்பெயினை 3-1 என தோற்கடித்தது. தொடக்கத்தில் ஸ்பெயின் லீட் எடுத்தாலும் பின்னர் பிரான்ஸ் அணி வலுவான கம்பேக் கொடுத்து வெற்றிபெற்றது.

ஆனால் ஒட்டுமொத்த மோதல்களில் இதுவரை 38 முறை இரண்டு அணிகளும் சந்தித்துள்ள நிலையில் ஸ்பெயின் அணி 18 முறை வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது. பிரான்ஸ் அணி 13 முறை வெற்றிபெற்றுள்ள நிலையில், 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளது.

france vs spain clash
‘கடவுளின் கை கோல் to மெஸ்ஸிக்கு முதல் போட்டி..’ இங்கிலாந்து-அர்ஜென்டினா மோதலின் 6 சிறப்பு அம்சங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com