\
சுவிட்சர்லாந்து கால்பந்து அணி
சுவிட்சர்லாந்து கால்பந்து அணிweb

FIFA உலகக்கோப்பை| ’விலகியது 90 ஆண்டுகால சாபம்..’ 1938-க்கு பின் சுவிட்சர்லாந்து வரலாற்று வெற்றி!

கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளது சுவிட்சர்லாந்து அணி.
Published on
Summary

FIFA உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து அணி அல்ஜீரியாவை 2-0 என வீழ்த்தி, 88 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்அவுட் வெற்றியை கண்டது. எம்போலோ, டான் டோயே கோல்களால் ஆட்டம் தொடக்கத்திலேயே முன்னிலை பெற்ற சுவிஸ் அணி, 1938க்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் ரவுண்ட் 16க்கு தகுதி பெற்று வரலாற்றை புதுப்பித்துள்ளது.

கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், லீக் சுற்றுகள் முடிவில் 16 அணிகள் வெளியேற்றப்பட்டு 32 அணிகள் பங்கேற்றுள்ள நாக் அவுட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற Round 32 நாக்அவுட் போட்டியில் சுவிட்சர்லாந்து மற்றும் அல்ஜீரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப்போட்டியில் யார் வெற்றிபெற்றாலும் முதல்முறையாக நாக்அவுட் போட்டியில் வெற்றிபெற்று வரலாறு படைப்பார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

போட்டியில் ஆதிக்கம் செலுத்திய சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல்கணக்கில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்திலேயே சுவிட்சர்லாந்தின் ப்ரீல் எம்போலோ கோல் அடிக்க, 46வது நிமிடத்தில் மற்றொரு சுவிட்சர்லாந்து வீரர் டான் டோயே 2வது கோலடித்து அசத்தினார். அதற்குபிறகு 2வது பாதியில் அல்ஜீரியா என்னதான் முயற்சித்தும் அவர்களால் கோலடிக்க முடியவில்லை.

சுவிட்சர்லாந்து கால்பந்து அணி
ரூ.5.7 கோடி.. ஏலத்திற்கு வரும் பீலேவின் 1958 ஜெர்சி!

விலகியது 90 ஆண்டுகால சாபம்..

மிகக் கடுமையான நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்து, கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகு (88 வருடங்கள்) உலகக் கோப்பை நாக்-அவுட் ஆட்டம் ஒன்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 1938-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் சுவிட்சர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றில் வென்றிருந்தது. அதன் பிறகு ஒன்பது தசாப்தங்களாகத் தொடர்ந்த சாபத்திற்கு நடப்புத் தொடரில் சுவிஸ் வீரர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து கால்பந்து அணி
சுவிட்சர்லாந்து கால்பந்து அணி

இந்த அசாத்திய வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி நடப்பு உலகக் கோப்பையின் ரவுண்ட் 16 சுற்றுக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது. அடுத்ததாக நடக்கவிருக்கும் கொலம்பியா மற்றும் கானா அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியை அடுத்த சுற்றில் நேருக்கு நேர் எதிர்கொள்ளக் காத்திருக்கிறது சுவிட்சர்லாந்து.

சுவிட்சர்லாந்து கால்பந்து அணி
FIFA| மெக்சிகோ வரலாற்று வெற்றி.. கால்பந்து கொண்டாட்டத்தில் 3 பேர் பலி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com