\
ஸ்கலோனி - யமால்
ஸ்கலோனி - யமால்web

ஃபைனலுக்கு முன் ’யமாலை பூட்டி வைக்க வேண்டும்..’ அர்ஜென்டினா பயிற்சியாளர் பேச்சு!

இறுதிப்போட்டியில் ஸ்பெயினை சமாளிக்க அவர்களின் நட்சத்திர வீரர் லமின் யமாலை அறையிலேயே வைத்து பூட்ட நினைக்கிறேன் என்று அர்ஜெண்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி நகைச்சுவையாக பேசியுள்ளார்..
Published on
Summary

2026 உலகக்கோப்பை இறுதியில் அர்ஜென்டினா-ஸ்பெயின் மோதலை முன்னிட்டு, அர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, 19 வயது அதிசய வீரர் லமின் யமாலை ‘அறையிலேயே பூட்டி வைக்க வேண்டும்’ என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். பீலேவுக்கு பிறகு இளம் வயதில் உலகக்கோப்பை கோல் அடித்த யமால், கால்பந்துக்குக் கிடைத்த பொக்கிஷம் என அவர் பாராட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விளையாட்டு என்றால் கால்பந்து தான்.. அதிலும் கால்பந்து உலகக்கோப்பை என்றால் ஒட்டுமொத்த உலக ரசிகர்களுக்கும் அது திருவிழா கோலம் தான்.. ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மார் போன்ற ஜாம்பவான்களின் ஆட்டத்தை உலகக்கோப்பையில் பார்ப்பது எல்லாம் அனைத்து கால்பந்து ரசிகர்களுக்கும் வரப்பிரசாதம் போலத்தான் பார்க்கப்படுகிறது.

இந்தசூழலில் நடப்பு 2026 கால்பந்து உலகக்கோப்பையில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மாரை கடந்து அடுத்த தலைமுறை வீரர்களான எம்பாப்பே, எர்லிங் ஹாலண்ட் வரிசையில் 19 வயது வீரரான லமின் யமால் ஆட்டத்தின் மீதும் அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

Yamal
Yamalpt desk

17 வயதில் எஃப்சி பார்சிலோனா அணிக்காக அறிமுகமான இந்த இளம் வீரர், லா லிகா மற்றும் யூரோ போட்டிகளில் இளம் வயதில் கோல் அடித்தவர் என்ற சாதனையோடு, இளம் வயது யூரோ சாம்பியன் என்ற வரலாற்றையும் படைத்தார். தொடர்ந்து தன்னுடைய திறமையை உலகக்கோப்பையிலும் வெளிப்படுத்திய அவர், பீலேவிற்கு பிறகு இளம் வயதில் உலகக்கோப்பை கோலடித்த 2வது வீரராக ஜாம்பவான்கள் வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சிறந்த டிரிப்ளிங் திறமை, அழுத்தமான நேரத்தில் கோலடிக்கும் சூழலை உருவாக்கி கொடுப்பதில் சிறந்தவராக விளங்கும் லமின் யமால், இந்த உலகக்கோப்பையில் தன்னுடைய தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் அர்ஜெண்டினாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அந்த மேஜிக்கை எடுத்துவருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஸ்கலோனி - யமால்
‘கடவுளின் கை கோல் to மெஸ்ஸிக்கு முதல் போட்டி..’ இங்கிலாந்து-அர்ஜென்டினா மோதலின் 6 சிறப்பு அம்சங்கள்!

இந்தசூழலில் தான் லமின் யமாலை கால்பந்து உலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று பாராட்டியிருக்கும் அர்ஜெண்டினாவின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, இறுதிப்போட்டியில் ஸ்பெயினை தடுப்பதற்கு யமாலை அவருடைய அறையிலேயே பூட்டிவைக்க நினைப்பதாக நகைச்சுவையுடன் பேசியுள்ளார்.

இறுதிப்போட்டி குறித்து பேசியிருக்கும் ஸ்கலோனி, “யமாலை எப்படித் தடுப்பது? அவரை அறையிலேயே பூட்டி வைக்க முடிந்தால் நன்றாக இருக்கும்! லமின் யமால் உண்மையிலேயே ஒரு மிகச்சிறந்த வீரர். இந்த இளைஞன் கால்பந்துக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அவர் தற்போது மிகவும் இளைமையான வீரராக இருக்கிறார், அவரிடம் இன்னும் பல மேஜிக்கை நிகழ்த்துவதற்கு திறமை ஏராளமாக உள்ளது. எதிர்காலத்தில் ஸ்பெயினுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு திறமையாளர்.. ஆனால் அது வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்காது என நம்புகிறோம். மெஸ்ஸியைப் போலவே, அவரையும் தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம்” என்று ஸ்கலோனி ஊடகங்களிடம் பேசுகையில் கூறினார்.

yamal
yamal

மேலும் ஸ்பெயின் அணியை எதிர்கொள்வது குறித்து பேசிய ஸ்கலோனி, 2024 யூரோ சாம்பியன்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவர்களின் பலம் என்ன, அவர்களின் பலவீனத்தை எப்படி பயன்படுத்த முடியுமோ அதை செயல்படுத்துவோம் என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

ஸ்கலோனி - யமால்
FIFA Final| விண்ணைத் தொடும் டிக்கெட் விலை.. நெருங்க முடியாத சாமானியர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com