கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே வீரர்.. 3 சரித்திரம் படைத்த எம்பாப்பே!
2026 உலகக்கோப்பையில் பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் முன்னணி அணிகள் என கருதப்பட்டாலும், நாக் அவுட் சுற்றில் ஒரே பிரிவில் மோதியதால் பிரான்ஸ் வெளியேறியது. இருந்தாலும், கேப்டன் எம்பாப்பே 10 கோல்கள் அடித்து தங்க காலணி வென்று, உலகக்கோப்பை வரலாற்றில் சரித்திரம் படைத்தார்.
2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் சிறந்த அணிகளாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இரண்டு அணிகள் பார்க்கப்பட்டன. இந்த 2 அணிகள் தான் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சந்திக்கும் என சொல்லப்பட்ட நிலையில், துரதிருஷ்டவசமாக இரண்டு அணிகளும் நாக் அவுட்டில் ஒரே பிரிவில் இடம்பெற்று பிரான்ஸ் அணி தோற்று வெளியேறியது.
2022 உலகக்கோப்பையில் 8 கோல்களை அடித்து தங்க காலணி விருதை வென்ற பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே, 2026 கால்பந்து உலகக்கோப்பையிலும் 10 கோல்கள் அடித்து தங்க காலணி விருதை தட்டிச்சென்றுள்ளார்.
கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு வீரர் 2 முறை இதுவரை தங்க காலணி விருதை வென்றிராத நிலையில், முதல் வீரராக வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார் எம்பாப்பே. அதேபோல கோல்டன் பூட் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு எந்தவொரு வீரரும் இரட்டை இலக்கத்தில் கோல்கள் அடிக்காத நிலையில், முதல் வீரராக 10 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.
அதுமட்டுமில்லாமல் கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்திருந்த மெஸ்ஸியை பின்னுக்குதள்ளி 22 கோல்களுடன் முன்னிலை வகிக்கிறார். மெஸ்ஸி 21 கோல்களுடன் பின்தங்கியுள்ளார்.

