Portugal vs Czech Republicpt desk
கால்பந்து
யூரோ கோப்பை கால்பந்து தொடர்: செக்குடியரசு அணியை போராடி வென்ற போர்ச்சுகல் அணி
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி செக்குடியரசு அணியை வீழ்த்தியது.
எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, தனது முதல் லீக் போட்டியில் செக் குடியரசு அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 62ஆவது நிமிடத்தில் செக் குடியரசு அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. சிலநிமிடங்களில், செக் குடியரசு வீரர் செய்த தவறால் OWN GOAL மூலம் போர்ச்சுகல் அணி சமன் செய்தது.
Portugal vs Czech Republicpt desk
இதையடுத்து ஆட்டம் முடியும் தருவாயில் போர்ச்சுகல் அணியின் பிரான்சிஸ்கோ கோல் அடித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். முன்னதாக நடைபெற்ற போட்டியில், துருக்கி - ஜார்ஜியா அணிகள் மோதின. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய துருக்கி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.