\
canada defeat south africa for 1-0 and moved round 16
canada defeat south africa for 1-0 and moved round 16web

நாக்அவுட் சுற்று| கடைசிநேர கோலால் History படைத்த கனடா.. கண்ணீருடன் வெளியேறிய தென்னாப்ரிக்கா!

2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரின் நாக்அவுட் சுற்றுகள் தொடங்கியிருக்கும் நிலையில், முதல் ஆட்டமே அனல்பறக்கும் ஆட்டமாக இருந்தது. தென்னாப்பிரிக்கா-கனடா இரண்டு அணிகளுக்கும் இடையேயான வலுவான போரில் கனடா கடைசி நிமிட வெற்றியை ருசித்தது.
Published on
Summary

2026 உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றின் முதல் போட்டியில் கனடா, தென்னாப்பிரிக்காவை கடைசிநேர கோலால் வீழ்த்தி வரலாறு படைத்தது. 90 நிமிடங்களும் கோல் ஏதும் இல்லாமல் கடும் பதட்டத்தில் நடந்த போட்டியில், கூடுதல் நேரத்தில் கேப்டன் ஸ்டீபன் யுஸ்டாக்கியோ அடித்த கோல் கனடாவை முதல் முறையாக ரவுண்ட் 16க்கு முன்னேற்றியது; தென்னாப்பிரிக்கா கண்ணீருடன் வெளியேறியது.

2026 கால்பந்து உலகக்கோப்பை தொடர் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 48 அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்ற லீக் சுற்றுப்போட்டிகள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், 16 அணிகள் வெளியேற்றப்பட்டு 32 அணிகள் அடுத்தச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

இந்த சூழலில் இன்று Round 32 சுற்று தொடங்கியிருக்கும் நிலையில், முதல் நாக் அவுட் போட்டியில் முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்ற தென்னாப்பிரிக்கா அணியும், கனடா அணியும் பலப்பரீட்சை நடத்தின. போட்டி நேரம் முழுவதும் இரண்டு அணிகளும் ஒரு கோலை கூட விட்டுக்கொடுக்காமல் டஃப் கொடுத்தன. கனடா அணி பல அற்புதமான ஷாட்களை அடித்தாலும், தென்னாப்பிரிக்கா அணியின் கோல் கீப்பர் பல சேவ்களைச் செய்து அரணாக விளங்கினார்.

ஆனால் போட்டி நேரம் முடிந்து கொடுக்கப்பட்ட 5 நிமிடத்தில் கனடா கேப்டன் ஸ்டீபன் யுஸ்டாக்கியோ ஒரு அருமையான கோல் அடித்து கனடாவை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இதுவரை அந்த அணி நாக்அவுட்டில் வெற்றிபெற்றதே இல்லை என்ற நிலையில், தற்போது ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது. தென்னாப்பிரிக்கா அணி முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியிருந்தாலும், அவர்களால் அந்த வெற்றியை தொடர முடியாமல் கண்ணீருடன் வெளியேறியது.

canada defeat south africa for 1-0 and moved round 16
உடைக்கப்பட்ட 149 ஆண்டுகள் சாதனை.. 401 ரன்கள் குவித்து உலகசாதனை படைத்த WI வீரர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com