யூரோ கோப்பை கால்பந்து தொடர்: பெல்ஜியம், போர்ச்சுகல் அணிகள் வெற்றி – ரசிகர்கள் கொண்டாட்டம்

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பெல்ஜியம் போர்ச்சுகல் அணிகள் வெற்றி பெற்றன. இதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Portugal vs Turkey
Portugal vs Turkeypt desk

ருமேனியாவிற்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் யோரி டெய்லிமான்ஸ் ஆட்டம் தொடங்கிய ஒரு நிமிடம் 13 வினாடிகளில் முதல் கோலை அடித்து அசத்தினார். இது கால்பந்து வரலாற்றில் பெல்ஜியம் அணி மிக விரைவாக அடித்த கோல் ஆகும். தொடர்ந்து 80ஆவது நிமிடத்தில் கே.டி.புரூனி மற்றொரு கோலை பதிவு செய்தார்.

Belgium vs Romania
Belgium vs Romaniapt desk

ருமேனியாவிற்கு கோலை பதிவுசெய்ய வாய்ப்பு கொடுக்காமல் பெல்ஜியம் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் பெல்ஜியம் அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தங்கள் நாட்டு அணி வெற்றி பெற்றதால், பெல்ஜியம் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Portugal vs Turkey
ஹாலோ ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னர்

மற்றொரு போட்டியில் துருக்கியை 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரரான ரொனால்டோ கோல் அடிக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. போர்ச்சுகல் வெற்றியை அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com