Jannik sinnerpt desk
டென்னிஸ்
ஹாலோ ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னர்
ஹாலோ ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஹாலோ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இந்த தொடரில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், போலாந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.
Jannik sinnerpt desk
விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சின்னர் 7-6, 7-6 என்ற செட் கணக்கில் ஹர்காக்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஜானிக் சின்னர் தரவரிசையில் முதலிடம் பெற்ற பிறகு வென்ற முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.