\
ronaldo vs Uzbekistan
ronaldo vs Uzbekistanweb

போர்ச்சுக்கல் போட்டி| ரொனால்டோ படைத்த 5 சாதனைகள்.. 7 சுவாரசியமான சம்பவங்கள்.!

போர்ச்சுக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 9 சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின.
Published on
Summary

2026 உலகக்கோப்பையில் உஸ்பெகிஸ்தானை 5-0 என வீழ்த்திய போர்ச்சுக்கல் அணியின் வெற்றியில் ரொனால்டோ இரு கோல்கள் அடித்து மாபெரும் சாதனைகள் படைத்தார். ஆறு உலகக்கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர், ஒரே ஆட்டத்தில் பல கோல்கள் அடித்த மிக வயதான வீரர், போர்ச்சுக்கலுக்காக உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமைகளை அவர் பெற்றார்.

2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரானது ’முதல்முறையாக உலகக்கோப்பைக்கு முன்னேறிய அணிகள், முதல் கோல், முதல் வெற்றி’ என பல வரலாற்று சம்பவங்களை தன்வசப்படுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மெஸ்ஸி, ரொனால்டோ, எம்பாப்பே போன்ற முன்னணி வீரர்கள் பல சம்பவங்களை பதிவுசெய்துவருகின்றனர்.

அந்தவகையில் 2022 உலகக்கோப்பை தொடரில் போர்ச்சுக்கல் அணிக்குள் இருந்த பல்வேறு உட்சிக்கல்களால் ஒரு ஆரோக்கியமான உலகக்கோப்பையை கொண்டிராத ரொனால்டோ, 2026 உலகக்கோப்பையின் ஆரம்ப போட்டியில் ஒரு கோலை கூட அடிக்காமல் போனது ஏமாற்றத்தை அளித்தது.

ronaldo
ronaldo

ஒருபக்கம் மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாரி கேன் போன்ற ஸ்டார் வீரர்கள் இரண்டு இரண்டு கோல்களாக அடிக்க, கோலே அடிக்காத ரொனால்டோ மீது அழுத்தம் அதிகமானது. இந்தசூழலில் தான் நேற்று நடைபெற்ற உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது போர்ச்சுக்கல் அணி.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ அடுத்தடுத்து 2 கோல்களை பதிவுசெய்து மிரட்டினார். மொத்தமாக 5 கோல்களை அடித்த போர்ச்சுக்கல் அணி 5-0 என உஸ்பெகிஸ்தானை வாஷ்அவுட் செய்தது.

ronaldo
ronaldo

இந்நிலையில் நேற்றைய ஒரே போட்டியில் ரொனால்டோ பல சாதனைகளை படைத்த நிலையில், போர்ச்சுக்கல் ஆட்டத்தில் 9 சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின.

ronaldo vs Uzbekistan
259 ரன்கள் ரன்சேஸ்.. 56 பந்தில் 136* ரன்கள் அடித்து வெற்றிபெற வைத்த திலக்வர்மா!

9 சுவாரசியமான சம்பவங்கள்..

ரொனால்டோ படைத்த சாதனைகள்

  • உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக 2 கோல்களை அடித்தபிறகு, 6 வெவ்வேறு உலகக்கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022, 2026) கோல்கள் அடித்த முதல் வீரராக வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மெஸ்ஸி 5 உலகக்கோப்பைகளில் கோல்கள் அடித்திருந்த நிலையில், அவரின் சாதனையை ரொனால்டோ முறியடித்தார்.

  • உலகக் கோப்பையில் ஒரே ஆட்டத்தில் பல கோல்களை அடித்த மிக வயதான வீரர் (41 வயது, 138 நாட்கள்) என்ற பெருமையையும் ரொனால்டோ இந்தப் போட்டியில் பெற்றார்.

  • கேமரூன் ரோஜர் மில்லாவிற்குப் (1994-ல் 42 வயது, 39 நாட்கள்) பிறகு, உலகக் கோப்பையில் கோல் அடித்த இரண்டாவது வயதான வீரர் ரொனால்டோ ஆவார்.

ரொனால்டோ
ரொனால்டோ
  • ஆண்களுக்கான ஃபிஃபா உலகக் கோப்பையில், தங்கள் நாட்டிற்காக மிக இளைய மற்றும் மிக வயதான கோல் அடித்தவர்கள் என்ற தனித்துவமான பெருமையை ரொனால்டோ எட்டினார். மைக்கேல் லாட்ரப் ( டென்மார்க் ), லியோனல் மெஸ்ஸி 2 பேருக்கு பிறகு இந்தச்சாதனையை படைத்த 3வது வீரர் ரொனால்டோவாகும்.

  • FIFA உலகக் கோப்பையில் போர்ச்சுகலின் அதிக கோல் அடித்த வீரராக ரொனால்டோ, யூசெபியோவை (9) முந்தினார். மேலும் ரொனால்டோ கோல் அடித்த 49வது நாடு உஸ்பெகிஸ்தான் ஆகும்.

ronaldo vs Uzbekistan
FIFA 2026 | உலகக் கோப்பையில் 18 கோல்கள்.. புதிய வரலாறு படைத்த மெஸ்ஸி!

ரொனால்டோவுக்கு பின் 2வது வீரர் மெண்டஸ்

உலகக் கோப்பையில் நேரடி ஃப்ரீ கிக் மூலம் கோல் அடித்த இரண்டாவது போர்ச்சுகல் வீரர் நூனோ மெண்டஸ் அசத்தினார். 2018-ல் ஸ்பெயினுக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஃப்ரீ கிக் மூலம் கோல் அடித்திருந்தார்.

22 ஆண்டுகள் 183 நாட்கள்

உஸ்பெகிஸ்தானின் பெக்ரூஸ் கரிமோவ் (18 ஆண்டுகள் 320 நாட்கள்) மற்றும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (41 ஆண்டுகள் 138 நாட்கள்) ஆகியோருக்கு இடையேயான 22 ஆண்டுகள் மற்றும் 183 நாட்கள் வயது இடைவெளியானது, ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இருவருக்கு இடையேயான மிகப்பெரிய வயது வித்தியாசமாக அமைந்தது.

ronaldo vs Uzbekistan
FIFA 2026 | 92 ஆண்டுகால கனவு.. முகமது சாலா அடித்த கோல்.. WC-இல் எகிப்துக்கு முதல் வெற்றி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com