\
Lionel Messi becomes the alltime leading goalscorer in FIFA World Cup history
messix page

FIFA 2026 | உலகக் கோப்பையில் 18 கோல்கள்.. புதிய வரலாறு படைத்த மெஸ்ஸி!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி.
Published on

கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், நாளுக்குநாள் பல்வேறு சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், நேற்று (ஜூன் 22) நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி 'ரவுண்ட்-16' சுற்றுக்கு முன்னேறியது.

messi
messix page

டல்லாஸில் நடைபெற்ற போட்டியில், அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி 38ஆவது மற்றும் இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்தில் கோல் அடித்தார். போட்டியின் 9ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் கோலாக மாற்றத் தவறினார். 38ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் தனது 17ஆவது கோலை பதிவுசெய்த மெஸ்ஸி, ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேவின் 16 கோல்கள் சாதனையை முறியடித்து அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார். தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்ற அர்ஜென்டினா அணி 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

Lionel Messi becomes the alltime leading goalscorer in FIFA World Cup history
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டி.. ஒண்ணு மெஸ்ஸி.. இன்னொண்ணு எம்பாப்பே! #FIFA2026
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com