\
ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி
ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்விfile photo

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி.. இந்திய பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை!

ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்தார் இந்திய பாரா ஈட்டி எறிதல் வீரர் அன்மோல் வசிஷ்டா.. பதக்கங்களை பறிமுதல் செய்து 3 ஆண்டுகள் தடைவிதித்தது ஒலிம்பிக் சங்கம்..
Published on: 
Summary

இந்திய பாரா ஈட்டி எறிதல் வீரர் அன்மோல் வசிஷ்டா, ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், சர்வதேச பாராலிம்பிக் குழு அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. F55 பிரிவில் அவர் பெற்ற முடிவுகள் மற்றும் பரிசுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்திய பாரா ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் அன்மோல் வசிஷ்டா ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு சர்வதேச பாராலிம்பிக் குழு 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

கடந்த மார்ச் 2026-இல் புதுடெல்லியில் நடைபெற்ற 'உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ்' போட்டியின் போது நடத்தப்பட்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட ஸ்டீராய்டு பொருளை அன்மோல் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இந்த ஊக்கமருந்து விதியை மீறியதற்காக அவருக்கு 3 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் F55 பிரிவில் அவர் பெற்ற முடிவுகள், புள்ளிகள் மற்றும் பரிசுகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படுகின்றன.

ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி
மரண பயம்காட்டிய ஜிம்பாப்வே.. கேப்டனாக முதல் போட்டியே இப்படியா? புலம்பி தள்ளிய மந்தனா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com