\
ஜிம்பாப்வே - ஸ்மிருதி மந்தனா
ஜிம்பாப்வே - ஸ்மிருதி மந்தனாcricbuzz - bcci

மரண பயம்காட்டிய ஜிம்பாப்வே.. கேப்டனாக முதல் போட்டியே இப்படியா? புலம்பி தள்ளிய மந்தனா!

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் முழுநேரக் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
Published on: 
Summary

முழுநேர கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவின் முதல் போட்டி சவால்களால் நிறைந்ததாக இருந்தது. ஜிம்பாப்வே பவுலர்கள் இந்திய அணியை திணற வைத்தபோதும், தீப்தி சர்மா மற்றும் நிக்கி பிரசாத் இணைந்து அணியை மீட்டனர். 115 ரன்கள் இலக்கை எட்டிய இந்தியா, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஜிம்பாப்வே மகளிர் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் முழுநேர கேப்டனாக ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட்டார். மிதாலி ராஜ் போன்ற தலைசிறந்த வீராங்கனைகளாலேயே கோப்பை வெல்லமுடியாத சூழலில், இந்தியாவிற்காக 2025 ஒருநாள் உலகக்கோப்பையை வென்றபிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

இந்தநிலையில் முழுநேர கேப்டனாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனாவிற்கு, அன்றைய நாள் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் அடித்தது.

116 ரன்கள் தானே எளிதாக அடித்துவிடலாம் என்ற களமிறங்கிய இந்திய அணிக்கு ஜிம்பாப்வே பவுலர்கள் மரண அடி கொடுத்தனர். 14 ரன்னுக்கு முதல் விக்கெட், 18-க்கு 2வது விக்கெட், 19 ரன்னுக்கு 3வது 4வது என விக்கெட்டை சரியவிட்ட இந்திய அணி அதிர்ச்சி கொடுத்தது. ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலில் வெர்மா, ஹர்மன்ப்ரீத் என அனைவரும் ஓரிலக்க ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

19 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா ஒருநேரத்தில் வெற்றிபெறுமா என்ற எண்ணமே இருந்தது. ஆனால் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அனுபவ வீராங்கனை தீப்தி சர்மா மற்றும் நிகி பிரசாத் 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர். 49 ரன்கள் அடித்து தீப்தி சர்மா அவுட்டாக 15. 4 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவுசெய்தது. ஜிம்பாப்வே அணியில் நியாஷா குவான்சுரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

முதல் போட்டியே வரலாற்று தோல்விக்கான பயம் இருந்த நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய ஸ்மிருதி மந்தனா ”ஒரு அணியாக நாங்கள் விரும்பியபடி சரியாக விளையாடாவில்லை, ஆனால் முடிவில் வெற்றி என்பது வெற்றிதான். நந்தினி ஷர்மா மிக சிறப்பாக பந்துவீசினார், நிக்கி பிரசாத் தனது அறிமுக போட்டியில் குறிப்பிடத்தக்க நிதானத்தை காட்டினார், மேலும் தீப்தி ஷர்மா, அவர் இதை மிக நீண்ட காலமாக செய்து வருகிறார். அவர் இந்த விளையாட்டின் ஒரு உண்மையான ஜாம்பவான். இந்த வெற்றியை பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் ஒரு குழுவாக நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும், மேம்படுத்திக்கொள்ள வேண்டிய விஷயங்களும் நிச்சயமாக ஏராளமாக உள்ளன" என்று கூறினார்.

ஜிம்பாப்வே - ஸ்மிருதி மந்தனா
களத்தில் இறங்குவாரா BHUVI?? எதிர்பார்ப்புகளை எகிறச் செய்யும் அறிவிப்பு
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com