ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டவுனில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 311 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 255 ரன்களும் எடுத்தன. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 373 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 84 ரன்களும், குயிண்டன் டி காக் 65 ரன்களும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் லயனின் டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கை 301 ஆக  உயர்ந்தது. 77 டெஸ்ட்டில் விளையாடியுள்ள லியான் இந்த மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் 300-க்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய 6-வது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் பெற்றார்.

430 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சால் 107 ரன்களுக்கு சுருண்டது. மோர்னே மோர்கல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com